நான் ஒருபொருளாதார நிபுணர் அல்ல…கணித மேதையும் அல்ல..ஒரு சாமானிய "பாமரன்" ஆனால் ஏமாறுவதும் ஏமாற்றப்படுவதும் என்னை அறியாமல் நடவாது என்பதை உணர்ந்தவன். இப்போது சோனியாவின் காங்கிரஸ் அரசு நம்மை எப்படி ஏமாற்றுகிறது என்பதை புரிந்துகொள்வோமா?
பெட்ரோல்…டீசல்–கேஸ் விலைகளை தாறுமாறாக ஏற்றும் காங்கிரஸ் அரசும்அதன் "ஜால்ராக்களும்" விலை ஏற்றத்தை நியாப்படுத்தும் "காரணிகள்" என்ன?
1..உலகச்சந்தையில் " எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு "இவ்வளவு டாலர்" ஏறிவிட்டது..இது அரசுக்கு பெரும் சுமை..இதை தொடர்ந்து சுமக்கமுடியாது.. விலை ஏற்றுவதை தவிர வேறு வழியில்லை..என ஒரு காரணம்..
2..பெட்ரோல்–டீசலுக்கு அரசு கொடுக்கும் "மானியம்" பலஆயிரம் கோடிகளை தாண்டுகிறது..இந்த பணத்தை "நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளுக்கு " பயன் படுத்தினால் நாட்டின் வளர்ச்சி பெரிதும் உயரும்..என மற்றொரு காரணம்..
நான் நான்கு காரணிகளை எடுத்துக்கொண்டு இதை ஆராய்ந்தேன்..
1..உலக சந்தையில் எண்ணெய் விலை.—இந்திய ரூபாய் மதிப்பு—–பணவீக்கம்.
கடந்த 2003 முதல் 2012 ஆம் ஆண்டுவரையிலான விலை நிலவரம்
ஆண்ட விலை டாலர்களில ரூபாய் மதிப்ப பண வீக்கம்
2003 29 44.6 3.7
2004 30 45.3 3.7
2005 55 44.11 5.5
2006 60 45.39 6.5
2007 90 41,35 7.5
2008 40 43.81 9.7
2009 70 51.16 14.9
2010 80 46.70 9.7
2011 107 55.22 6.49
2012 108 55.90 7.4
நான்காவது காரணி…இந்திய "ஆட்டோமோபைலின் வளர்ச்சி"
இந்தி அரசின் "ஆயத்தீர்வு" ( Excise .Duty.)வரியில் 20 சதவீதத்துக்கு மேல் "ஆட்டோமோபைல்" தொழிலில் இருந்து கிடைக்கிறது. உலக "ஆட்டொமோமைல் தயாரிப்பில் இந்தியா ஆறாவது இடம் வகிக்கிறது.
இந்திய சாலைகளின் பரப்பளவை விட நம்மிடம் இருக்கும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகம் பெட்ரோலியப் பொருட்களின் தேவையில் 70 சதம் இறக்குமதி செய்கிறோம்.
மொத்த எண்ணெய் செலவில் 60 சதம் வாகனங்களுக்கு போகிறது. இப்ப ஓரளவுக்கு உங்களுக்கு காரணம் என்னவென்று புரிந்திருக்கும் என நம்புகிறேன்.
வரூமானத்திற்காக "சாரயக்கடைகளை " திறந்துவைத்து மக்களை "சீரழிப்பதுபோல"–ஆட்டோமொபைல் வரியை நம்பி ..கார் உற்பத்தியை பெருக்கவிட்டு …எண்ணெய் இறக்குமதி அதிகம் செய்து ..பழியை உலகசந்தையின் மீது அரசு தூக்கிப்போடுகிறது ..
பெற்றோலிய பொருட்கள் விலை உயர்த்துவதால் மீண்டும் விலைவாசி உயர்வு– பணவீக்கம் உயர்வு… ரூபாய் மதிப்பு வீழ்ச்சி என மீண்டும் அதே சுழல்
அரசின் கட்டுப்பாடற்ற செலவினங்கள். நிர்வாக சீர்கேடு, ஊழல் இவைகள் அனைத்தும் சேர்ந்து பெட்ரோல் டீசல் விலையை உயர்த்திவிட்டு . சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை உயர்வையும். உள்நாட்டு கட்டமைப்பையும் பற்றி பேசுவதும் ஏமாற்று வேலைதானே
நன்றி; எஸ்.ஆர்.சேகர் பாஜக அகில இந்திய வர்த்தகர் அணி செயலாளர்
இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ... |
வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ... |
பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.