பாஜக, ஆர்எஸ்எஸ். அமைப்புகள் பயங்கரவாத பயிற்சிமுகாம்களை நடத்துகின்றன எனும் உள்துறை அமைச்சர் ஷிண்டேவின் கருத்துக்கு , காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி மன்னிப்புக் கேட்கவேண்டும் என பாஜக செய்தித் தொடர்பாளர் முக்தர் அப்பாஸ் நக்வி வலியுறுத்தியுள்ளார்.
“”பா.ஜ.க.,வும், ஆர்எஸ்எஸ்சும் தேசிய அமைப்புகள். உள்துறை அமைச்சரது கருத்தில், காங்கிரஸ்சின் கேடு விளைவிக்கும் மனப் பாங்கு பிரதிபலிக்கிறது. அவரது கருத்து கடும் ஆட்சேபத்துக்குரியது. ஏற்றுக் கொள்ள முடியாதகருத்து மட்டும் அல்ல, அபாயகரமானதும்கூட.
நாட்டின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கக் தக்கது உள்துறை அமைச்சரின் இந்த கருத்தைவிட வேறு மோசமான ஒன்று இருக்கமுடியாது.
கோழைகளின் கூடாரமாக காங்கிரஸ் கட்சி இருப்பதை சில நேரங்களில் நான் உணர்கிறேன். ஏனெனில், நாட்டில் பயங்கரவாத தாக்குதல்கள் அடிக்கடி நடக்கிறது . பயங்கரவாதிகள் புற்றீசல்போல அதிகரித்து விட்டனர். பயங்கரவாதத்துக்கு எதிராக போரிடும்கருவியை (பொடா சட்டம்) அவர்கள் காங்கிரஸ் கட்சி அழித்து விட்டது.
இந்த கருத்துக்காக, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி மன்னிப்புக் கேட்கவேண்டும். ராகுல் காந்தியும், உள்துறை அமைச்சரும் மன்னிப்பு கேட்கவேண்டும். இல்லாவிட்டால் கடும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்தார்.
தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ... |
குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.