தணிக்கை செய்யப்பட்டு வெளிவரயிருக்கும் விஸ்வரூபம் படத்தை பாதுகாக்கவேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது என ‘புதிய அலைகள்’ எனும் பெயரில் செயல்பட்டு வரும் உதவி இயக்குநர்களை உள்ளடக்கிய அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது .
இது குறித்து அந்த அமைப்பு மேலும் தெரிவித்திருப்பதாவது ”திரைப்படம் என்பது ஒரு கலைப்படைப்பு. அதற்கு தடைகோருவது என்பது படைப்பு சுதந்திரத்துக்கே எதிரானது.
இது மக்களாட்சி நடைபெறும் நாடு. மத ஆட்சி நடைபெறும் நாடல்ல. ஒரு திரைப்படம் சம்சமூகத்துக்கு பொருத்தமானது தானா என ஆராய தணிக்கைக்குழு இருக்கிறது. அதன் மூலம் அங்கீகாரம் வழங்கப்பட்ட ஒரு திரைப் படத்துக்கு பிரச்னை வரும் போது பாதுகாக்க வேண்டியபொறுப்பு அரசுக்கு உள்ளது . இல்லை எனில் தடிஎடுத்தவன் எல்லாம் தண்டல் காரன் என்னும் நிலை உருவாகி விடும்.
ஒரு திரைப் படத்தின் மீது ஏற்றுக்கொள்ள முடியாத கருத்து முரண்படு இருப்பின் தணிக்கைத் துறையின் மீது வழக்குதொடுக்கலாம். தணிக்கை சட்டத்தை மாற்ற போரடலாம். அதற்கு எதிராக எழுதலாம்; ஆனால் திரையரங்கில் காட்சி நடை பெறுவதை தடுப்போம் என போராடுவது எந்தவகையில் சரி. அப்படி சட்டத்தை மீறிசெயல்படுபவர்களை குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய வேண்டும் என்று அந்த அமைப்பு கேட்டுக கொண்டது
இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ... |
கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது. |
Leave a Reply
You must be logged in to post a comment.