டெல்லியை பாரீசாக மாற்றுவேன் என்று வாக்குறுதியளித்து விட்டு, குடிசைப் பகுதியாக மாற்றிவிட்டார் என முதல்வர் ஷீலா தீட்சித் மீது டெல்லி மாநில பாஜக புதிய தலைவர் விஜய்கோயல் குற்றம்சாட்டினார்.டெல்லி மாநில பாரதிய ஜனதா கட்சி தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர் விஜய் கோயல் சமீபத்தில் நியமிக்கப்பட்
டார். டெல்லி சட்டப்பேரவைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடக்க உள்ள நிலையில், செய்தியாளர்களிடம் இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது;
என் மீது நம்பிக்கை வைத்து டெல்லி மாநில தலைமை பொறுப்பை கட்சி எனக்கு கொடுத்துள்ளது. இதுதான் எனக்கு பெரிய சவால். ஷீலா தீட்சித்தை எதிர்த்து பெரும் வியூகம் அமைக்க தேவையில்லை. அவரது அரசின் செயல்பாடுகளை பிரசாரம் செய்தாலே போதும். டெல்லியை பாரீசாக மாற்றுவேன் என்று வாக்குறுதியளித்து ஆட்சியை பிடித்தார். ஆனால், 14 ஆண்டுகளில் டெல்லியை குடிசைப் பகுதியாக மாற்றியதுதான் ஷீலாவின் சாதனை.
பணவீக்கத்தை பொருத்தவரை டெல்லி, பாரீஸ் போல் உள்ளது என்பதை ஒப்புக் கொள்கிறேன். டெல்லியில் 40 லட்சம் மக்கள், குடிசைகளில் வசிக்கின்றனர். பொய் வாக்குறுதிகள் அளித்து மக்களை ஏமாற்றியதற்காக அவருக்கு லோக் ஆயுக்தாவே கண்டனம் தெரிவித்துள்ளது.முக்கியமான சவால் என்றால், தொடர்ந்து அதிகரித்து வரும் மின்கட்டணம். இதனால் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட் டுள்ளனர்.
365 நாட்களும் 24 மணி நேரமும் இடைவிடாத மின்சாரத்தை குறை ந்த கட்டணத்தில் தருவதாக மின் வினியோக நிறுவனங்கள் வாக்கு கொடுத்தன. ஆனால், மின் வெட்டு தினமும் நடக்கும் செயலாகிவிட் டது. மின் கட்டணம் அடிக் கடி உயர்த்தப்படுகிறது. டெல்லி அரசும் டிஸ்காம்களும் கை கோர்த்து செயல்படுவதால், அதை ஆய்வு செய்யவோ, கட்டண உயர்வை தடுத்து நிறுத்தவோ யாரும் இல்லை.
டெல்லியில் 50 சதவீதத்துக்கும் அதிகமான மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கப்படவில்லை. இதற்கு பற்றாக்குறை காரணமில்லை சரியான நிர்வாகமின்மைதான் காரணம்.அடுத்தது, சட்டம் ஒழுங்கு. பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று பெண் முதல்வரே கூறும்போது சட்டம் ஒழுங்கு பற்றி நான் சொல்வதற்கு எதுவும் இல்லை. மத்தியிலும் மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சிதான் நடக்கிறது. ஆனால், தலைநகரிலேயே பெண்களுக்கு பாதுகாப்பில்லை. இதனால், நாட்டில் மட்டுமல்ல, சர்வதேச அளவில் டெல்லிக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது. டெல்லிக்கு செல்ல வேண்டாம் என்று தங்கள் மக்களை பல நாடுகள் எச்சரித்துள்ளன என்றார்
கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ... |
கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ... |
இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.