அமெரிக்காவின் தெற்கு கரோலினாவின் கவர்னராக நம்ரதா நிக்கி ஹாலே பதவி ஏற்றுள்ளார். இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர், இவரது பெற்றோர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள் ,
நம்ரதா நிக்கி ஹாலே அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவர். 38 வயதாகும் நிக்கி ஹாலேவுக்கு கணவரும், இரண்டு-குழந்தைகளும் இருக்கின்றனர் . இவர் தெற்கு கரோலினாவின்
மாகாண கவர்னர் தேர்தலில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றுள்ளார்.
நம்ரதா நிக்கி ஹாலே தெற்கு-கரோலினாவி 86 -வது கவர்னராக பதவி ஏற்றுள்ளார். லூசியானா மாகாண கவர்னராக இருக்கும் .இந்திய வம்சாவளியை சேர்ந்த பாபி ஜிண்டால், அமெரிக்காவுக்கான இந்திய தூதர் மீரா சங்கர் உட்பட பலர் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்டனர்.
தெற்கு கரோலினா மாநிலத்தில் வெள்ளையினத்தை சேராத எவரும் இதுவரை கவர்னராக ஆனதில்லை. பெண்களும் கவர்னர் பொறுப்பு ஏற்றதில்லை. இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி அந்த இரண்டு சாதனைகளையும்-முறியடித்துள்ளார். மேலும், அமெரிக்க மாகாணத்தில் கவர்னர் பொறுப்பு ஏற்கும் இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை நிக்கி பெறுகிறார், இதன் மூலம் அமெரிக்காவில் யூதர்களுக்கு அடுத்து இந்தியர்கள் அதிக செல்வாக்கு பெற்றவர்கள் என்ற நிலை உருவாகியுள்ளது.
பதவி ஏற்பு விழாவில் பேசிய நிக்கி , “நம்மிடம் இல்லாததை தேடி அலைவதை விட, நம்மிடம் இருப்பதை வைத்து மகிழ்ச்சி அடையும் முறையை வளர்த்து கொண்டேன். கடின முயற்சியின் வாயிலாக இந்த பதவியை அடைந்துள்ளேன். இந்த மாகாணத்தில் உள்ள அனைவருக்கும் இன பேதமின்றி தொண்டாற்றுவேன். இந்த மாகாண மக்களுக்கு வாய்ப்பும், மகிழ்ச்சியும் காத்திருக்கிறது’ என்றார்.
{qtube vid:=q4ryEZAw674}
Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ... |
அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ... |
Leave a Reply
You must be logged in to post a comment.