அனைத்து பிரச்சனைகளுக்கும் வளர்சி ஒன்றே தீர்வு

 அனைத்து பிரச்சனைகளுக்கும் வளர்சி ஒன்றே தீர்வு‘ஒரே இந்தியா- தலை சிறந்த இந்தியா’ என்பது தான் தமது முதன்மை தாரகமந்திரம், அனைத்து பிரச்சனைகளுக்கும் வளர்சி ஒன்றே தீர்வு என குஜராத் முதல்வர் நரேந்திரமோடி அறிவித்துள்ளார்.

OFBJP “என்ற அமெரிக்காவில் வாழும் பா.ஜ.க. நண்பர்கள்”அமைப்பினருக்காக வீடியோ கான்பரன்ஸின் மூலம் அவர் இன்று உரை யாற்றினார்.

அவர் தமது உரையில், என்னைப் பொறுத்த வரையில் ஒரேஇந்தியா- தலை சிறந்த இந்தியாவை உருவாக்கவேண்டும் என்பது தான் தாரகமந்திரம். மதச் சார்பின்மைக்கான விளக்கம் என்ன வென்று கேட்டால் ‘முதலில் இந்தியா’ மற்றவை யெல்லாம் பிறகு தான்.

நாம் எதைச் செய்தாலும் இந்தியாவுக்கானதாகவே அது இருக்கவேண்டும். நாம் எங்கு வசித்தாலும் நமதுகலாச்சாரம், பாரம் பரியத்தை நினைவில் கொள்ளவேண்டும்.

வெளிநாடுவாழ் இந்தியர்கள் தங்களால் ஆன அனைத்து வகையிலும் உதவவேண்டும். இந்தியாவை பார்த்திராத இந்திய வம்சாவழி குழந்தைகள் தற்போது இந்தியாவில் சமூகசேவைகளில் ஈடுபடுத்திக் கொள்கின்றனர். இது ஒருநல்ல அம்சம்.

கடந்த 30 ஆண்டுகளாக 21-ம் நூற்றாண்டை எந்தநாடு தலைமை ஏற்று நடத்திச்செல்லும் என்ற கேள்வி இருந்து வருகிறது. 19ஆம் நூற்றாண்டு ஐரோப்பாவின்வசம் இருந்தது. நாம் காலனி நாடாக இருந்திருந்தால் நிலைமை வேறாக இருந்திருக்கும். நாம் காலனித்துவநாடாக இருந்ததால் அந்த வாய்ப்பு நம்கைகளில் இருந்து நழுவிப் போனது.

20-ம் நூற்றாண்டில் தமது செல்வாக்கை அதிகரித்து கொண்டிருந்த நேரத்தில் மகாத்மாகாந்தி தலைமையில் நாம் தேசவிடுதலைக்காகப் போராடிக் கொண்டிருந்தோம். இப்போது இந்த 21-ம் நூற்றாண்டு ஆசியாவின் கைகளிலிருக்கிறது. வாஜ்பாய் நாட்டின் பிரதமராக இருந்தபோது இந்தியாவால் சில விஷயங்களை செய்யமுடிந்தது.

இந்தியா அணு ஆயுத சோதனையை நடத்தியது. இதன் மூலம் இந்தியாவிலும் வெளி நாட்டிலும் நமது நாட்டின் வல்லமை மீதான நம்பிக்கை புதுப்பிக்கப் பட்டது. அந்த நிலை நீடித்திருந்தால் இந்தியாவின் கைகளில் உலகம் இருந்திருக்கும்.

ஆனால் கடந்த 6-7 ஆண்டுகாலமாக அப்படி எதுவும் நடக்கவில்லை . இந்த இருட்டானநிலையில் உலகத்தின் கவனத்தை குஜராத் மாநிலம் ஈர்த்து ஒருநம்பிக்கை ஒளிக்கீற்றை உருவாக்கி இருக்கிறது.

அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளை பொருளாதாரநெருக்கடி பதம் பார்த்தது. ஆனால் குஜராத் மாநிலமோ ஒரு போதும் வளர்ச்சிப் பணிகளை நிறுத்திக்கொண்டதே இல்லை. குஜராத்தை தொழில் துறையினர் விரும்பும் மாநிலமாக உருவாக்கினோம். அனைத்து பிரச்சனைகளுக்கும் வளர்சி ஒன்றே தீர்வு .

இதை குஜராத் மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தின. சட்டசபை தேர்தல் வெற்றி என்னுடையது அல்ல.. குஜராத் மக்களுடையது. இன்றைய உலகம் குளோபல் வார்மிங் பற்றி பேசுகிறது. நமது வழிபாட்டு முறையே இயற்கை சார்ந்தது. விலங்குகள் சார்ந்ததாக இருக்கிறது. அதைக் கடைபிடித்தால் போதும். எலியும் பாம்பும் ஒரே இடத்தில் இருக்க முடியுமா? என்று கேட்கப்படுவது வழக்கம். இருக்க முடியும் என்கிறது ஆன்மீகம். சிவன் வீட்டில் பாம்பும் எலியும் இருக்கிறதே.. அனைவருக்கும் மகாசிவராத்திரி வாழ்த்துகள் என்றார் அவர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம்

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ...

மாதுளையின் மருத்துவக் குணம்

மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ...

வாய் துர்நாற்றம் நீங்க

ஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே வந்துவிடும் . ...