ராஜஸ்தான் உள்ளிட்ட மாநில சட்ட பேரவைத் தேர்தல்களோடு சேர்த்து, டிசம்பரில் மக்களவைக்கு முன் கூட்டியே தேர்தலை நடத்துவதற்கு காங்கிரஸ் கட்சி விரும்புவதாக பாஜக. மூத்த தலைவர் வெங்கய்ய நாயுடு கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர், ஹைதராபாதில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஐ.மு., கூட்டணி அரசு நொண்டிவாத்து போன்று செயலிழந்து விட்டது. அது தற்ப்போதைக்கு சமாஜவாதி மற்றும் பகுஜன்சமாஜ் கட்சிகள் வெளியிலிருந்து அளிக்கும் ஆதரவுடன் செயற்கை சுவாசகருவி பொருத்தப்பட்ட நிலையில் இருக்கிறது .
மக்கள் மத்தியில் தன் மீது அதிருப்தி அதிகரித்து வருவதையும், பொருளாதார நிலை மேம்பட போவதில்லை என்பதையும் காங்கிரஸ் கட்சி உணர்ந்துள்ளது.
எனவே இழப்புகளை தவிர்க்கவும் ஓரளவுபலத்தையாவது தக்க வைத்துக்கொள்ளவும் ராஜஸ்தான், ம.பி., தில்லி மற்றும் சத்தீஸ்கர் சட்டப் பேரவைத் தேர்தலோடு டிசம்பரில் மக்களவைக்கு தேர்தலை நடத்துவதற்கு அக்கட்சி விரும்புகிறது.
அரசியல் சட்டஅமைப்புகளை தவறாக பயன் படுத்துவதற்கு காங்கிரஸ் பெயர்பெற்றது. இது, மத்திய அரசுக்கான ஆதரவை தி.மு.க., விலக்கிக்கொண்ட சில மணி நேரங்களில் முக.ஸ்டாலின் வீட்டில் சிபிஐ. நடத்திய சோதனைகளின் மூலம் மீண்டும் நிரூபணமாகியுள்ளது.
ஆதரவு விலகலுக்குப் பிறகு நடத்தப்பட்டசோதனை என்பது ஒரு மிரட்டலாகும். “இதேகதிதான் உங்களுக்கும் ஏற்படும்’ என கூட்டணியில் உள்ள மற்றகட்சிகளுக்கு அளிக்கப்பட்ட தகவலாகும் இது.
நாளுக்கு நாள் கெட்டபெயரை சம்பாதித்துவரும் காங்கிரசுடன் கூட்டணியை தொடர்வது தனது வெற்றிவாய்ப்புகளை பாதிக்கும் என்பதை திமுக. உணர்ந்து விட்டது.
தற்போது சமாஜவாதி மற்றும் பகுஜன்சமாஜ் கட்சிகளும் உரிய சந்தர்ப்பத்துக்காக காத்திருக்கின்றன. காங்கிரஸக்கு ஒருகூட்டணியை நிர்வகிப்பதற்கான திறமை இல்லாத காரணத்தாலும், அந்த கட்சி கூட்டணி தர்மத்தை பின் பற்றாததாலும் ஒவ்வொரு கட்சியாக வெளியேறி வருகின்றன.
மக்களவைக்கு முன் கூட்டியே நடக்க உள்ள தேர்தலுக்கு மக்கள் தயாராகவேண்டும். ஐ.மு., கூட்டணியில் நிலவரம் சரியில்லை என்பதால் அது எப்போது வேண்டு மானாலும் கவிழலாம். நாட்டுக்கு இது நல்லது என்பதோடு, நாட்டில் இப்போதுள்ள நிலையற்ற தன்மை முடிவுக்குவரவும் வழிவகுக்கும் என்றார் வெங்கய்ய நாயுடு.
இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ... |
வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.