ராஜிவ்காந்தி பிரதமராக ஆவதற்கு முன்பு போர்விமானங்கள் வாங்குவதில் இடை தரகராக செயல்பட்டதாக விக்கிலீக்ஸ் தகவல்களை வெளியிட்டுள்ளது. இது பற்றி காங்கிரஸ் விளக்கமளிக்க வேண்டும் என பா.ஜ.க கருத்து தெரிவித்துள்ளது.
மிகமுக்கியமான ஆயுதபேரங்கள் குறித்து தகவல்கள் வெளிவரும்போது ராஜிவ் குடும்பத்தினரின் பெயர்கள் மட்டுமே கூறப்படுவதாகவும் பாஜக கூறியுள்ளது.
1970களில் ஸ்வீடன் ஆயுத நிறுவனமான சாப்ஸ்கேனியா (Saab-Scania) என்ற நிறுவனம் இந்தியாவுக்கு விக்கென் (Viggen) போர் விமானங்களை விற்க முயன்றபோது அதற்கு இடை தரகராக ராஜிவ் செயல்பட்டதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. ஆனாலும் அந்தபேரத்தில் சாப்ஸ்கேனியா வெற்றிபெற வில்லை.
1975ம் வருடம் அக்டோபர் மாதம் ராஜிவிற்கு இந்த விவகாரத்தில் தொடர்புபிருப்பதாக ஸ்வீடன் தூதரகத்தின் அதிகாரிமூலம் தகவல் கிடைத்ததாக கூறப்பட்டுள்ளது.
இதன் படி ராஜிவை ஏர்இந்தியாவில் பைலட்டாக பணியாற்றுவதாக மட்டுமே அறிவதாகவும், அவரை தொழில்முனைவோராக இப்போது தான் அறிகிறோம் என சுவீடன் தூதரகத்தில் செய்தி பதிவு செய்ய பட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.
இது குறித்து பா.ஜ.க.செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவேட்கர் கூறியதாவது ; பாதுகாப்பு துறைக்கு காங்கிரஸ் அரசுசெய்யும் ஒப்பந்தங்கள் அனைத்தும் சுவீடன் மற்றும் இத்தலி நாடுகளுடனேயே மேற்கொள்ள படுகின்றன. மேலும் இந்தஒப்பந்தங்கள் அனைத்தும் ராஜீவ்காந்தி குடும்பத்தினராலேயே மேற்கொள்ள படுகின்றன.
போஃபர்ஸ் பீரங்கிபேர ஊழல் அந்த குடும்பத்தினருக்கு இருக்கும் தொடர்புகளுக்கு இது வரை விடைதெரியவில்லை. ஹெலிகாப்டர் ஊழலில் ஒருகுடும்பத்திற்கு 200 கோடி ரூ லஞ்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது. அந்தகுடும்பம் எது என தெரியவில்லை. இந்த குற்றச்சாட்டுக்கள் பற்றி கண்டிப்பாக விளக்கம் தர வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ... |
பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ... |
நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.