கூட்டுறவு சங்கதேர்தல், அதிமுக.,வின் கட்சித்தேர்தலா, என பா.ஜ.க., மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார் .
தேனியில், கட்சியின் புதியநிர்வாகிகள் சந்திப்புகூட்டத்திற்கு வந்திருந்த,
அவர் கூறியதாவது: கூட்டுறவு சங்கதேர்தல், அதிமுக., கட்சித் தேர்தலை போன்று நடத்தப்படுகிறது. தேனிமாவட்டம், சின்னமனூரில், கூட்டுறவு சங்கதேர்தலுக்கு மனு தாக்கல்செய்ய சென்ற பா.ஜ.,நகர தலைவர் பரமசிவத்தை சின்னமனூர் நகராட்சி தலைவர் சுரேஷ், மனு தாக்கல் செய்ய கூடாது, என்று எச்சரித்துள்ளார். கேபிள்தொழில் செய்துவரும், அவரது கேபிள் இணைப்புகளை துண்டித்துள்ளார்.இதை போன்ற அட்டூழியம் தொடர்ந்து நடக்கிறது. காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறார்கள் .
ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தவேண்டும். இலங்கையில் நடைபெறும் குழப்பத்துக்கு , இந்தியா காரணம், என்று ராஜபக்ஷே கூறுகிறார். இதற்கு பிரதமர் மன்மோகன்சிங், பதில் கூறவேண்டும்.
என்றார்.
குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ... |
முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ... |
ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ... |
Leave a Reply
You must be logged in to post a comment.