குஜராத் கலவரவழக்கில் தொடர்புடைய பத்து பேருக்கு தூக்குதண்டனை விதிக்கக்கோரி மனு

 குஜராத் கலவரவழக்கில் தொடர்புடைய பத்து பேருக்கு தூக்குதண்டனை விதிக்கக்கோரி மனு குஜராத் கலவரவழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பாஜக. முன்னாள் அமைச்சர் மாயாகோட்னானி உள்ளிட்ட பத்து பேருக்கு தூக்குதண்டனை விதிக்கக்கோரி மனுத்தாக்கல் செய்ய நரேந்திரமோடி அரசு முடிவு செய்துள்ளது .

குஜராத்தில் கோத்ரா ரயில்_எரிக்கப்பட்ட மறுநாள் 2002ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி நரோடாபாட்டியா எனும் இடத்தில் மிகப்பெரிய வன்முறை வெடித்தது. இதில் சிறுபான்மையினர் பலர் கொல்லப்பட்டனர். இதுதொடர்பான வழக்கில் மாயா கோட்னானி, பாபு பஜ்ரங்கி உள்ளிட்ட பலர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்தவழக்கில் மொத்தம் 70பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் கோட்னானி, பஜ்ரங்கி உட்பட 32பேரை குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தது.

இதில் கோட்னானிக்கு 28 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பஜ்ரங்கிக்கு ஆயுட்கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் 8 பேருக்கு 31 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 22 பேருக்கு 24 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் குஜராத் மாநில அரசு இந்தவழக்கில் கோட்னானி, பஜ்ரங்கி உட்பட பத்து பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுட்கால சிறை தண்டனையை தூக்குதண்டனையாக மாற்றக்கோரி ஆளும் நரேந்திரமோடி அரசு முறையீடுசெய்ய முடிவு செய்திருக்கிறது. இதற்காக மாநில அரசு, 3 நபர் சட்டவல்லுநர் குழுவை அமைத்துள்ளது.

விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பைஎதிர்த்து 10 பேருக்கு தூக்குதண்டனை விதிக்கக்கோரி குஜராத் அரசு சார்பில் நேற்று ஐகோர்ட்டில் மேல் முறையீட்டு மனு தாக்கல்செய்யப்பட்டது. சீக்கிய கலவரம் நடந்து 30 பது வருடம் ஆகிறது இன்னும் குற்றவாளி யார் என்றே கண்டுபிடிக்கவில்லை , ஆனால் குஜராத் கலவரம் நடந்து பத்து வருடத்திலேயே குற்றவாளிகளை தண்டித்து மேல்முரையிடும் செய்துள்ளது நரேந்திர மோடி அரசு .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

முருங்கைப் பூ, முருங்கை பூவின் மருத்துவ குணம்

முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ...

மிளகாயின் மருத்துவக் குணம்

பசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

புற்றுநோய்க்கான மருத்துவம்

பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ...