தனது தொலைபேசி பதிவுகள் பற்றிய தகவல்களை, மத்திய அரசு வெளிநபரின் மூலம் சேகரித்துள்ளது; இந்தவிஷயுத்தில், முக்கியமாக செயல் பட்ட, முக்கிய நபரை பாதுகாக்க, டில்லி காவல்துறையினர் முயற்சி செய்கின்றனர் ‘ என்று அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
சமிபத்தில் ராஜ்ய சபா எதிர்க் கட்சி தலைவர் அருண் ஜெட்லியின் தொலைபேசி உரையாடல் குறித்த தகவல்களை, டில்லி காவல்துறையினர் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து பார்லிமென்டிலும் அமளி நிலவியது.
இந்நிலையில், அருண் ஜெட்லி பத்திரிக்கை ஒன்றில் எழுதிய கட்டுரையில் டில்லி காவல்துறையின் நடவடிக்கை பற்றி கேள்வி எழுப்பி உள்ளார்.
அதில் அவர் தெரிவித்திருப்பதாவது :எனது மொபைல்போனில் இருந்து சென்ற அழைப்புவிவரங்கள் மற்றும் என் டிரைவர் மற்றும் எனது மகனின் மொபைல்போன் பதிவுகளை பெறுவதற்கு முயற்சிகள் நடந்துள்ளன.
இந்த பதிவுகளைபெற, அரசே, அவுட் சோர்சிங் முறையில் வெளியாரை நியமித்திருக்க வேண்டும் அல்லது பழைய குற்றவாளிகளில் ஒருவரை ஒற்றராக நியமித்திருக்க வேண்டும்.
இந்த தொலைபேசி பதிவுகள் அனைத்தும் நவம்பர் – டிசம்பர் மற்றும் ஜனவரிமாத காலகட்டத்தில் பெறப்பட்டுள்ளன. இந்த கால கட்டத்தில், பா.ஜ.,வில் பல்வேறு நடவடிக்கைகள் நடந்துள்ளன.
கட்காரிமீதான விசாரணை, கட்காரியை, 2வது முறையாக தலைவராக தேர்ந்தேடுக்க நடந்த முயற்சி, அதைதொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் என்று உள்ளன. அது போன்று கட்காரி போட்டியிடுவதில் இருந்து விலகியது, ராஜ்நாத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது போன்ற சம்பவங்களும் நடந்துள்ளன.
எனவே, தொலைபேசி பதிவுகளைபெறுவதற்கு, இரண்டு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேண்டும். இதற்கு, மூளையாக செயல் பட்டுள்ள நபரை காப்பாற்றும் நடவடிக்கையில், டில்லி காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதன் பின்னணியில் இருக்கும் காரணம் என்ன என்பதை அறிய விரும்புகிறேன். இது தொடர்பாக டில்லி காவல்துறை அளித்தவிளக்கம் ஏற்கும்படியாக இல்லை.என்று அருண்ஜெட்லி தெரிவித்தார்.
முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ... |
அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ... |
சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ... |
Leave a Reply
You must be logged in to post a comment.