ஒற்றுமையும், சமத்துவமே அழகின் ரகசியங்கள், அன்பெனும் அச்சில்தான் இவ்வுலகம் சுழல்கிறது. என்று மாதா அமிர்தானந்தமயி கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை பிரம்மஸ் தான கோவிலின், 23ம் ஆண்டுவிழாவில் மாதா அமிர்தானந்தமயி, கலந்து கொண்டு பக்தர்களுக்கு ஆசிவழங்கி பேசியதாவது: இன்றைய சமுதாயம் , பிரிவினை, சச்சரவுகள், போராட்டங்களை உருவாக்கும் விதத்தில் மாறியிருக்கிறது. நிறங்கள் வெவ்வேறாக இருப்பினும் , ஏழுநிறங்கள் குறிப்பிட்ட அளவில், இணையும்போது தான் ஆகாயத்தில் வானவில் தோன்றுகிறது. நிறங்கள் தனி தனியாக நின்றால், இந்தளவு அழகு இருக்காது. ஒற்றுமை , சமத்துவம் போன்றவைகளே அழகின் ரகசியங்கள். முதியோர் இல்லத்தில் பெற்றோரை சேர்ப்பதை பிள்ளைகள் தவிர்க்கவேண்டும். அன்பை, வாழ்வின் விரதமாக கொண்டவர்களே, அச்சமின்றி இருப்பர். அன்பெனும் அச்சில்தான் இவ்வுலகமே சுழல்கிறது.
கடந்த, 25 வருடங்களில், 40 சதவீத இயற்கையை அழித்துவிட்டோம். பூமியில், பெட்ரோலும், தண்ணீரும் குறைந்துவருகிறது. தண்ணீரையும், பெட்ரோலையும் வீணாக்ககூடாது. மரக் கன்றுகள் நடுவதற்கு அனைவரும் முன்வரவேண்டும்.
டில்லி கற்பழிப்பு சம்பவம்,சமுதாயத்தில் உயர்ந்தகோட்பாடுகள் அழிந்துவிட்டன என்பதை தெளிவாக காட்டுகிறது . இதுமட்டும் இன்றி, இளைஞர்கள், இணையதளங்களில் சீரழிந்த படங்களை பார்க்கின்றனர். எரியும்தீயில், பெட்ரோலை ஊற்றுவது போன்றது , அவர்களிடம் இது , காமத் தீயை அதிகரிக்கசெய்கிறது. விவேகபுத்தியை இழந்து, தவறானவழிகளில் செல்கின்றனர். நமக்குக் கிடைத்த இந்தவாழ்வை, உலகுக்கும் நமக்கும் பயன்படும் விதமாக வாழவேண்டும்.
நம் கண்களில், கருணை எனும்மை தீட்டலாம். உதடுகளில் உண்மைபேசுதல் என்ற சாயம் பூசலாம். பரோபகாரம் எனும் மருதாணியால் அழகுசெய்யலாம். நடத்தையில், பணிவின் இனிமை சேர்க்கலாம். இதயத்தில் மனிதநேயத்தின், இறை அன்பின் ஒளியை, நிறைக்கலாம். இதனால், உலகையும். நம்மையும் மேலும்அழகாக ஆக்கலாம். என்று அமிர்தானந்தமயி அருளாசி வழங்கினார்.
இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ... |
முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ... |
Leave a Reply
You must be logged in to post a comment.