திமுக–காங்கிரஸ்–குழாயடிச் சண்டை துவங்கிவிட்டது.

 திமுக--காங்கிரஸ்--குழாயடிச் சண்டை துவங்கிவிட்டது. 2-ஜி அலைக் கற்றை ஊழலை ஊத்தி மூட..காங்கிரஸ் செய்யும் சதி ரொம்ப வித்தியாசமாக உள்ளது..அதுவும் கொஞ்சம்கூட பயமும் வெட்கமும் இன்றி…காங்கிரஸ் நடந்து கொள்ளும் விதம் வினோதமாக உள்ளது..

2 ஜி அலைக்கற்றை ஊழல்– சி.ஏ.ஜி மூலம் வெளியானவுடன்..சோனியாவின் தொண்டரடிப்பொடிகள்…கபில் சிபலும்..ப.சிதம்பரமும்..போட்டிப்போட்டுக்கொண்டு பேட்டிகளில் கூறியதாவது..

1..சி.ஏ.ஜி….பொய் சொல்கிறது..
2..அரசுக்கு ஒரு பைசாகூட இழப்பில்லை..
3..தே.ஜ.கூ. அரசு கையாண்ட கொள்கையையே நாங்களும் கையாளுகிறோம்..
4..ராஜா தப்பு செய்யவில்லை.

இவை யாவிலும் உண்மை இல்லை என்று தெரிந்து ஊர் சிரித்ததும்,,நாடே சிரித்ததும், ராசாவை காப்பாற்ற காங்கிரஸ் ஜே.பி.சி. விசாரணைக்கு உத்தரவிட்டது..
சோனியாவின் கைத்தடி பி.சி.சாக்கோவை  தலைவராக போட்டு, காங்கிரசையும் திமுகவையும், ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து காப்பாற்றுவதே இதன் நோக்கம்..

இடையில் திமுக விற்கு "சனி வலுத்து வாக்கு ஸ்தானம் பலவீனம் அடைந்து.." காங்கிரஸ் கூட்ட்ணீயில் இருந்து விலகிக்கொண்டது..

பங்கு முழுதும் பெற்றுக்கொண்ட காங்கிரஸ் இதுதான் தருணம் என்று, பழிமுழுதும் ஆ.ராசாமீது போட்டு,தப்பிக்க பார்த்தது..

ராசா மூலம் திமுகவும் காங்கிரசை விடாமல துரத்தியது.
1..இது பிரதமருக்கும், ப,சிதம்பரத்துக்கும் தெரிந்துதான் எல்லாம் நடந்தது
2..என்னிடம் 100 பக்க அறிக்கை உள்ளது..அதில் உண்மை முழுதும் உள்ளது..
3..என்னை ஜே.பி.சி. விசாரணைக்கு அழைக்க வேண்டும் ..

என ஆ.ராசா..அடம் பிடித்தவுடன் காங்கிரஸ் கலகலத்துப்போனது.
இப்போது ஜே.பி.சி.யை வைத்து காங்கிரஸ் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க முடிவு செய்தது.

1..அத்தனைக்கும் காரணம் ராசாதான்..
2..பிரதமரும்..ப.சிதம்பரமும், மினரல் வாட்டர் போல சுத்தமானவர்கள்.

இப்படி ஒரு ரிப்போர்ட் தான் ஜே.பி.சியின் இன்றைய "லீக் செய்யப்பட்ட" ரிப்போர்ட்…

1..முதலில் "சுத்தமானவர்"..என்ற ராசாவை இப்போது "தீட்டு பட்டவர் " என்றது
2..கட்டு கட்டாக பச்சை பொய்களை வெட்கமில்லமல் அடுக்கியது..

இது பற்றிய புதிய தலைமுறை டி.வி. விவாதத்தில் பங்கும் கொண்ட காங்கிரசின் வேலூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.திரு ஞானசேகரன் ..ராசாவை ஜே.பி.சி அழைத்தால்..ராசா…ப.சிதம்பரமும், பிரதமரும், தான் குற்றவாளி என சொன்னாலும் சொல்லிவிடுவார்…என்ற உண்மையை போட்டு உடைத்தார்..

ராசாவை காக்க வந்த கருணாநிதியின் நண்பர் சுப.வீரபாண்டியனும், ரிசர்வ் வங்கி தலைவர் சுப்பாராவும், ராசா..2ஜி அலைகற்றை விலையை உயர்த்தாமல் 2001 ஆம் ஆண்டு விலைக்கு விற்றது சரிதான் எனச் சொன்னதாக..சொன்னார்..

ஆனால் இன்றைய 21.4.2013 இந்து பத்திரிக்கையில், சுப்பாராவ் அப்படி சொல்லவில்லை என்றும் மாறாக 2008 ஆண்டில் 2001 ஆண்டு விலைக்கு கொடு[ப்பது எப்படி நியாயம் ஆகும் என 22.11.2007 ஆண்டு தனது கடிததில் தொலைதொடர்பு செய்லாளரை கேள்வி கேட்டிருக்கிறார் என்ற செய்தி வெளியாகி உள்ளது.

ஆக உண்மையை மறைத்து புளுகு மூட்டையை மட்டுமே அவிழ்த்துக்காட்டும், இரண்டு கட்சிகள், "குழாயடிச் சண்டை போட " இப்போது தெருவுக்கு வந்து விட்டது.

காங்கிரஸ் –ஜே.பி.சி.யை பயன்படுத்திக்கொண்டிருக்கிறது..தி.மு.க.வும் ஆ.ராசாவும் என்ன செய்யப்போகிறார்கள்….பொருத்திருந்து பார்ப்போம்..

நன்றி ; எஸ்.ஆர். சேகர் எம்.ஏ.பி.எல்

பாஜக மாநிலப் பொருளாளர்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

உடல் சூட்டை தணிக்கும் எலுமிச்சை

மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ...

கீரையின் மருத்துவ குணம்

கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ...

பொடுதலையின் மருத்துவக் குணம்

பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ...