பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் எம்.ஆர். காந்தி மர்ம நபர்களால் வெட்டப்பட்டார்

 பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் எம்.ஆர். காந்தி மர்ம நபர்களால் வெட்டப்பட்டார் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் எம்.ஆர். காந்தி (வயது 62) மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டப்பட்டு சிகிச்சைபெற்று வருகிறார் .

எம்.ஆர். காந்தி பாஜக.,வின் மூத்த நிர்வாகியான இவர் நாகர்கோவில் ஜெகநாதன் தெருவில் வசித்துவருகிறார். தினமும் அதிகாலையில் சாலையில் நடை பயிற்சி செய்வது வழக்கம்.

இன்று காலையிலும் அவர் நடை பயிற்சிக்கு சென்றார். காலை 6 மணியளவில் கான்கார்டியா பள்ளி அருகே நடந்து சென்ற போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 வாலிபர்கள் திடீரென எம்.ஆர். காந்தியை வழி மறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.

இதில் அவரது தலையின் பின் பக்கம் படுகாயம் ஏற்பட்டது. ரத்தவெள்ளத்தில் அவர் மயங்கி விழுந்தார். உடனே அந்த வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்று விட்டனர்.

எம்ஆர். காந்தி ரோட்டில் மயங்கி கிடந்ததை அந்தவழியாக சென்றவர்கள் பார்த்து பால்பண்ணை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

எம்ஆர். காந்தி தாக்கப்பட்ட சம்பவம் பாஜக தொண்டர்கள் மத்தியில் பரவியதும் அவர்கள், அவர் சிகிச்சைபெறும் மருத்துவமனை முன்பு குவிந்தனர். நகரசபை தலைவி மீனாதேவ், பாரதீய ஜனதா மாவட்ட செயலாளர் தேவ், வர்த்தகஅணி தலைவர் முத்துராமன், பொருளாளர் கணேசன், நகர தலைவர் ராகவன், முன்னாள் தலைவர் ராஜன், கவுன்சிலர்கள் நாகராஜன், பெருமாள்பிள்ளை, இந்து முன்னணி நகர தலைவர் ராஜா உள்பட நிர்வாகிகளும் அங்கு வந்தனர்.

பாஜக மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணனுக்கும் இந்த தகவல்தெரிவிக்கப்பட்டது. அவர் மருத்துவமனைக்கு சென்று எம்.ஆர். காந்தியிடம் உடல்நலம் விசாரித்தார். மேலும் சம்பவத்திற்கு காரணமானவர்களை கண்டுபிடித்து கைதுசெய்ய வேண்டுமென்றும் கூறினார்.

இதற்கிடையே மருத்துவமனை முன்பு குவிந்த பாஜக.,வினர் எம்.ஆர். காந்தியை வெட்டியவர்களை உடனடியாக கைதுசெய்து நடவடிக்கை எடுக்கவேண்டு மென்று கோஷம் எழுப்பினர்.

திடீரென அவர்கள் ஆஸ்பத்திரிமுன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது.

தகவல் அறிந்து மாவட்டபோலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், டிஎஸ்பி. உதயகுமார், இன்ஸ்பெக்டர்கள் சுடலை மணி, ராஜசேகரன் மற்றும் போலீசார் விரைந்துசென்றனர். அவர்கள் போராட்டம் நடத்திய பாஜக.,வினரிடம் சமரசம் பேசினர். எம்ஆர். காந்தியை தாக்கியவர்களை உடனடியாக கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதிஅளித்தனர்.இதை ஏற்றுக்கொண்ட கட்சியினர் மறியலைகைவிட்டனர். இதையடுத்து எஸ்.பி. மணிவண்ணன் ஆஸ்பத்திரியில் சிகிச்சைபெறும் எம்.ஆர். காந்தியிடம் சம்பவம் குறித்து நேரில்விசாரித்தார்.

மேலும் எம்ஆர். காந்தி வெட்டுப்பட்டு கிடந்ததை பாஜக.,வினருக்கு தெரிவித்த நபரிடமும் சம்பவம் குறித்து கேட்டுஅறிந்தார். இதுபற்றி அவர் கூறும்போது, சம்பவத்திற்கு காரணமானவர்கள் யார்? என்பதை விரைவில் கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்போம். இதற்காக டிஎஸ்பி. உதயகுமார் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்படும் என்றார்.

எம்.ஆர். காந்தி தாக்கப்பட்ட சம்பவம் பிள்ளையார்விளை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதி மக்களுக்கு தெரியவந்ததும் அவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

சாலை மறியலிலும் ஈடுபட்டனர். மேலகிருஷ்ணன் புதூர், பள்ளம்பகுதிகளுக்கு சென்ற 4 அரசு பஸ்களையும் சிறை பிடித்தனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. தகவல்அறிந்து சுசீந்திரம் போலீசார் அங்கு விரைந்துசென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமரசப்பேச்சு நடத்தினர்.

மேலும் அசம்பாவிதங்கள் ஏற்படாமலிருக்க பதட்டமான பகுதிகளில் ஆயுதம்தாங்கிய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

அதிமதுரத்தின் மருத்துவக் குணம்

இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ...

நீரிழிவுநோய் உள்ளவர்களுக்கான உணவுமுறை

நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ...

வயிற்றுவலி குணமாக

நற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் வறுப்பாய் வறுத்து ...