நரேந்திர மோடி 100 சதவீதம் மதச்சார்பற்றவர்

நரேந்திர மோடி 100 சதவீதம் மதச்சார்பற்றவர் குஜராத் முதல்வர் நரேந்திரமோடி, மதசார்பற்றவர், நேர்மையான தலைவர் , பிரதமர் பதவிக்கு தகுதியானவர். 2014 லோக்சபா தேர்தலுக்கு முன்பாக அவரை பிரதமர் வேட்பாளராக, பாஜக , அறிவிக்க வேண்டும்,”என்று ராம்ஜெத்மலானி கருத்து தெரிவித்துள்ளார் .

இது குறித்து நிருபர்களிடம் அவர் மேலும் கூறியதாவது: பிரதமர் வேட்பாளரை, பா.ஜ.க., முன்னதாகவே அறிவிக்கவேண்டும் என, மக்கள் எதிர் பார்க்கின்றனர். தேர்தலுக்கு பின், பிரதமர்வேட்பாளர் யார் என, அறிவிப்பது பாதகமானவிளைவுகளை ஏற்படுத்தும்.

மோடி பிரதமர் வேட்பாளராக எதிர்ப்புத்தெரிவிப்பவர்கள், ஊழல் நிறைந்த, ஐ.மு., கூட்டணி அரசு பதவியில் நீடிக்கவேண்டும் என, நினைப்பவர்களே. மோடியை விமர்சிப்பவர்கள், இந்திய அரசியல்சட்டத்தை கவனமாக படிக்கவேண்டும்.

அதில், மத சார்பின்மைக்கு விளக்கம் தரப்பட்டுள்ளது. அதைப்புரிந்து கொள்ளாதவர்களே, மதசார்பின்மை எனும் பிரச்னையை கிலப்புகின்றனர் . மதவாதம் , மத சார்பின்மை என்ற வார்த்தைகள், இன்றையநாளில், தவறாக பயன்படுத்தப்படுகின்றன. தவறான புரிதல் அதன் அர்த்தம் மற்றும் முக்கியத்துவம் தெரியாமலேயே, பலர் தவறாகப் பயன் படுத்துகின்றனர். மோடி, நம் நாட்டின் ஈடு இணையற்ற மதச்சார்பற்ற தலைவர். அவர், 100 சதவீதம் மதச்சார்பற்றவர்.

மோடியை பிரதமர்வேட்பாளராக அறிவித்தால், பா.ஜ.க.,வும், தே.ஜ., கூட்டணியும், வரும் லோக்சபாதேர்தலில், நிச்சயம் பலன்அடையும்.என்று ராம்ஜெத்மலானி கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மகாராஷ்டிர அறிந்து கொள்ள வேண்ட ...

மகாராஷ்டிர அறிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் மகாராஷ்டிர மாநிலத் தேர்தல்களில் மஹாயுதி அணி வெற்றி, MVA ...

முக்கிய திட்டங்களுக்கு மத்திய ...

முக்கிய  திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் இந்தியாவில் இயற்கை வேளாண்மையை மேம்படுத்து வதற்கான திட்டம் உள்ளிட்ட ...

குழந்தை திருமணம் இல்லாத இந்திய ...

குழந்தை திருமணம் இல்லாத இந்தியாவை உருவாக்கும் வகையில் அன்னபூர்ணா தேவி இன்று பால் விவாகம் முகத் பாரத் தேசிய இயக்கத்தை தொடங்கி வைக்கிறார் குழந்தை திருமணம் இல்லாத இந்தியாவை உருவாக்கும் வகையில் மத்திய ...

தமிழக கூட்டுறவு வங்கிக்கு அமித ...

தமிழக கூட்டுறவு வங்கிக்கு அமித்ஷா விருது வழங்கினார் டில்லியில் சர்வதேச கூட்டுறவு ஆண்டு விழா நேற்று நடந்தது. ...

அரசியலமைப்பு சட்டத்திற்கு உட் ...

அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு எனது  கடமைகளை செய்கிறேன் – பிரதமர் மோடி '' யாருடைய அதிகார வரம்பையும் மீறாமல், அரசியலமைப்பு சட்டத்திற்கு ...

நீதித்துறையின் பணியை, எதிர்க்க ...

நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன 'நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன' என மக்களவை ...

மருத்துவ செய்திகள்

அறுசுவை உணவின் பயன்

உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ...

ஆப்பிளின் மருத்துவக் குணம்

ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ...

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு உணவு முறை

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ...