சுப்ரீம் கோர்ட்டின் பனி சிறக்க வாழ்த்துக்கள்

 சுப்ரீம் கோர்ட்டின் பனி சிறக்க வாழ்த்துக்கள் அப்பாடா, ஒருவழியாக சுப்ரீம் கோர்ட் கையில் சாட்டையை எடுத்துகொண்டது மிகவும் வரவேற்க்கத்தக்கது. இதெல்லாம் காங்கிரசுக்கு சகஜம். கருணாநிதி மேலிருந்த சி பி ஐ ( சர்க்காரியா ) கமிஷன் ஊழல் வழக்குகளை அரசியல் ஆதாயத்துக்காக வாபஸ் பெற்றார் .

அப்போது முதல் சி பி ஐ காங்கிரசின் அடிமையாக, கைத்தடியாக, கூலிப்படையாகவே இருக்கிறது. நாய் வாலை நிமிர்த்த முடியது காங்கிரசைத் திருத்தமுடியாது ஒழித்துக்கட்டுவதே ஒரே தீர்வு.

சி.பி.ஐ எனும் மந்திரக்கோலை வைத்துக்கொண்டு மத்திய அரசு , மத்திய அரசின் லகானை கைவசம் வைத்துள்ள மன்மோகன் சிங், மத்திய அரசின் லகானை கையில் வைத்துள்ள மன்மோகன் சிங்கை தன் முழுமையான கட்டுப்பாட்டில் வைத்துள்ள சோனியா காந்தி ஆகியோர் ஆடுகின்ற ஆட்டங்கள் அப்பப்பா முழுமையான பலமில்லாத நிலையிலும் , சுயநலவாதிகளின் துணையுடன் ஆட்சியை பிடித்த நாள் முதலே காங்கிரஸ் அரசு மத்திய அரசை தக்கவைத்துக்கொள்ள முதலில் கரன்சி கட்டுக்களை எடுத்துவிட்டு காரியத்தை சாதித்து வந்தது.

கரன்சிகட்டுக்கு படியாத கட்சி தலைவர்களை தங்கள் பக்கம் இழுப்பதற்கும், தங்களுடன் உள்ள தலைவர்கள் ஏடாகூடமாக எதாவது பேசத்தொடங்கினாலும் இப்போதெல்லாம் "சி.பி.ஐ " ஐ பயன்படுத்த தொடங்கிவிட்டது எல்லோரும் அறிந்த , ஊரறிந்த உண்மை என்றாகிவிட்டது.

பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவி சுப்ரீம் கோர்ட்டின் பனி சிறக்க வாழ்த்துக்கள் மாயாவதியையும், சமாஜ் வாதி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ்வையும் மடக்கிப்போட சி.பி.ஐ மிகப்பெரிய அளவில் உதவியதாக சொல்லப்படுகிறது.

மாயாவதியும், முலாயம் சிங் யாதவும் எந்த குற்ற வழக்குகளிலும் சிக்காமல் இருந்து இருந்தார்களானால் , மன்மோகன் சிங் மற்றும் சோனியா கண்ணில் விரல் விட்டு ஆட்டோ ஆட்டு என்று ஆட்டியிருப்பார்கள், ஆனால் அவர்கள் மிகப்பெரிய குற்றச்சாட்டுகளில் மாட்டிக்கொண்டு முழித்துக்கொண்டுள்ளதால் , மத்திய அரசை பகைத்துகொள்ள முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டு விட்டார்கள் .

பகைத்துகொள்ள முடியாத நிலைமையையும் தாண்டி , சோனியா சொல்படி நடக்கவேண்டிய நிலைமையில் அவர்களை தள்ளியது சி.பி.ஐ தான் . சி.பி.ஐ எனும் மந்திர கோல் மட்டும் மன்மோகன் சிங் , சோனியா ஆகியோரிடம் இல்லாமல் இருந்தால் மேற்கண்ட இரு கட்சி தலைவர்களும் சுதந்திரமாக தங்கள் கட்சி நடவடிக்கைகளை எடுத்திட முடியும்,

அப்படி அவர்கள் நடக்க தொடங்கி இருந்தால் என்றைக்கோ இந்த அலங்கோலமான ஆட்சி கவிழ்ந்து இருக்கும் , பாராளுமன்றத்தில் மெஜாரிட்டி இல்லாமலேயே , சில கட்சி தலைவர்களை மிரட்டியும், உருட்டியும் தங்கள் ஆட்சியை தக்கவைத்து கொண்டிருக்கின்றார்கள் .

இந்தியா சுதந்திரம் அடைந்த நாள் முதல் , இதுவரை மத்தியில் ஆட்சியில் இருந்த பிரதமர்களில் மோசமான பிரதமர், செல்வாக்கில்லாத பிரதமர், செயல்படாத பிரதமர் என்று பார்த்தால், மன்மோகன் சிங் தான் கண்முன் நிற்கின்றார்.

ஆரம்பத்தில் நல்லவர் என்றெல்லாம் எல்லோராலும் போற்றப்பட்டவர், நம்பப்பட்டவர் இன்று பெரும்பாலோரது நம்பிக்கையை முழுவதுமாக இழந்துவிட்டு அலங்கோலமாக காட்சியளிக்கின்றார்.

அவரது இந்த நிலமைகளுக்கேல்லாம் காரணம் சோனியா தான் என்பதில் யாருக்கும் சந்தேகமே இல்லை, ஆனாலும் சோனியா மீது பழி போட்டுவிட்டு நம் பிரதமர் தப்பித்துகொள்ளவும் முடியாது.

ஆட்சி கட்டிலில் தலைமை பொறுப்பில் இருப்பவர் இந்த அளவுக்கு அடிமையாக கட்சி தலைவருக்கு இருப்பதோ, அல்லது அவர்களின் கையாளாக செயல்படுவதோ ஏற்றுக்கொள்ளா முடியாத ஒன்று .

ஒருசில விஷயங்களில் கட்சி தலைவி சோனியாவின் பேச்சை கேட்டு நடந்தாலும், முக்கியமான தருணங்களில், நாட்டுக்கே கேடாய் முடியும் விஷயங்களில், ஆட்சிக்கு பெரிய அவமானத்தை தேடித்தரும் விஷயங்களில் தன்னுடைய முடிவை தயவு தாட்சண்யத்துக்கு இடமின்று சொல்லி நல்வழி நடக்கவேண்டிய கடமை பிரதமருக்கு உண்டு.

அந்த பொறுப்பிலிருந்து பிரதமர் விலகி நெடுந்தூரம் சென்று விட்டதாகவே கருதுகிறேன் , இனி அவராலும் ஆட்சியை , ஆட்சியில் பங்கேடுத்துகொண்டுல்லோரை நல்வழிப்படுத்த முடியாது .

2 ஜி மெகா ஊழலை மூடிமறைக்க மத்திய காங்கிரஸ் அரசு முயலுகிறது என்று எல்லா எதிர்கட்சியினரும் கரடியாக கத்தியபோதும் மத்திய அரசு மிகவும் அலட்சியபோக்குடனேயே நடந்து கொண்டது, யார் பேச்சையும் , யாருடைய எதிர்ப்பு குரலுக்கும் செவிசாய்க்க வில்லை .

தன் இஷ்டப்படி தான்தொன்றித்தனமாகத்தான் செயல்பட்டு வந்தது, சுப்ரீம் கோர்ட் தலையிட்டு , வழக்கை கண்காணிக்க தொடங்கியதால் தான் , வழக்கு ஒழுங்கான திசையில் பயணிக்க தொடங்கியது.

சுப்ரீம் கோர்ட் 2 ஜி மெகா ஊழலில் தலையிடாமல் இறந்து இருந்தால், இந்நேரம் அந்த வழக்கு ஊத்தி மூடப்பட்டு இருக்கும். எனவே இப்போது சி.பி.ஐ விஷயத்தில் சுப்ரீம் கோர்ட் தலையிட்டு , அவர்களுக்கு முழு சுதந்திரம் கிடைக்குமாறு செய்வது தான் தங்களின் முதல் பனி என்று சொல்லியுள்ளது நட்டு மக்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது .

சுப்ரீம் கோர்ட்டின் பனி சிறக்க வாழ்த்துக்கள்.

நன்றி; நித்தியஸ்ரீ

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

புற்றுநோய்க்கான மருத்துவம்

பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ...

கருந்துளசியின் மருத்துவ குணம்

நஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.

திருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா?

Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ...