ஊழலற்ற இந்தியாவைக் காண்பது வாழ்வில் எந்நாளோ?

 ஊழலற்ற இந்தியாவைக் காண்பது வாழ்வில் எந்நாளோ? "ஊழலின் விளை நிலம் இந்தியா' என்று சொல்லும் அளவுக்கு, எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்ற நிலைக்கு நாட்டைக் கொண்டு சேர்த்ததில், காங்கிரஸ் கட்சிக்குக் கணிசமான பங்குண்டு.

நிலம், நீர், ஆகாயம், காற்று, நெருப்பு என, பஞ்ச பூத ஊழலையும், அக்கட்சி, மொத்த குத்தகைக்கு எடுத்துள்ளது. பீரங்கி மூலம் நிலத்தில் ஊழல், நீர்மூழ்கிக் கப்பல் மூலம் நீரில் ஊழல், "2ஜி' அலைக்கற்றை மூலம் காற்றில் ஊழல், ஹெலிகாப்டர் மூலம் ஆகாயத்தில் ஊழல், நிலக்கரி மூலம் நெருப்பில் ஊழல் என, பஞ்ச பூத ஊழலையும், தன் கைவசம் கொண்டுள்ளது.

இந்த நிலையில், வருங்காலப் பிரதமர் ஆக, ராகுல் மறுத்தாலும், காங்கிரசாரால் முன்மொழியப்படுவார். இந்த லட்சணத்தில், கர்நாடக பா.ஜ., அரசு ஊழலில், உலக சாதனை படைக்கிறது என, அவர் கூறி வருவது, வேடிக்கையாக உள்ளது.

அனைத்து ஊழல்களையும் விசாரிக்க, விசாரணைக் குழுக்களை அமைப்பதற்கு காங்கிரஸ் என்றுமே சளைத்ததில்லை. ஆனால், விசாரணைக் குழுக்கள் ஏதேனும் உருப்படியாகச் செயல்பட்டனவா, தீர்ப்பை வழங்கினவா என்றால்,  இல்லை என்ற பதிலே கிட்டும்.

விசாரணைக் குழுக்கள் முன், சம்பந்தப்பட்டோர் வர மறுப்பதும், தான் அந்தத் துறையோடு சம்பந்தப்பட்டிருந்தாலும், அதற்கும், தனக்கும் சம்பந்தம் இல்லை என, அறிக்கை விடுவதும், வரைமுறையாகிப் போயின.

பிரதமரோ, அமைச்சரோ, உயர் அதிகாரியோ, அலுவலரோ, தான் ஊழலுக்கு அப்பாற்பட்டவர் என்றால், நீதி விசாரணைகளை நேரில் சந்தித்து அப்பழுக்கற்றவர் என, நிரூபிப்பது தானே நியாயம்?

நிலக்கரி ஊழல் சம்பந்தமாக, சி.பி.ஐ., தயாரித்த அறிக்கையை, மத்திய சட்ட அமைச்சர் அஸ்வினி குமாரும், பிரதமர் அலுவலக அதிகாரிகளும் வாங்கிப் பார்த்ததாகவும், அதில் திருத்தங்கள் செய்ததாக வெளியாகும் தகவல், ஆட்சி செய்வோருக்கு அழகல்ல.

பிரச்னைகள் வெடித்ததும், தனக்கும், அதற்கும் சம்பந்தமில்லை என, சட்ட அமைச்சர் பேசுவதும், சந்தேகங்களையே கிளப்புகின்றன.

ஜாதிச் சான்றிதழ் பெறுவதில் இருந்து, ராணுவத் தளவாடங்கள் வாங்குவது வரை, அடிமட்டத்தில் இருந்து, மேல் மட்டம் வரை, ஊழல் மலிந்துள்ளது. ஊழலற்ற இந்தியாவைக் காண்பது வாழ்வில் எந்நாளோ? ??

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

துத்தியின் மருத்துவக் குணம்

இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ...

தண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )

தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே  இல்லை. மேலும் தண்ணீர் ...

வெங்காயத்தின் மருத்துவ நன்மை

பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ...