சில வரிகளை அஸ்வனி குமார் நீக்கினார் ; சிபிஐ

 சில வரிகளை அஸ்வனி குமார் நீக்கினார் ; சிபிஐ நிலக்கரி ஊழல் வழக்கின் விசாரணை அறிக்கையில் சில வரிகளை சட்ட அமைச்சர் அஸ்வனிகுமார், பிரதமர் அலுவலக அதிகாரிகள், அரசு தலைமை வழக்கறிஞர் ஆகியோர் நீக்கினர் என்று மீண்டும் உச்சநீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது.

இதற்காக உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பும் கோரியிருக்கிறார் சிபிஐ இயக்குனர் ரஞ்சித் சின்ஹா. பிரதமர் மன்மோகன் சிங் நிலக்கரி துறை அமைச்சக பொறுப்பை வைத்திருந்த போது நாட்டில் உள்ள நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததில் ரூ.1.85 லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளது என்பது தலைமை கணக்கு தணிக்கையாளர் அறிக்கையின் புகார். இது தொடர்பாக சி..ஐ. விசாரணை நடைபெற்று வருகிறது.

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ஒரு பொது நலன் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் சி.பி.ஐ. சார்பில் உச்சநீதிமன்றத்தில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இந்த அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்வத்ற்கு முன்பாக பிரதமர் மன்மோகன் சிங்கை காப்பாற்றும் நோக்கத்தில் மத்திய சட்ட அமைச்சர் அஸ்வினி குமார், பிரதமர் அலுவலகம் மற்றும் நிலக்கரித்துறை அமைச்சக அதிகாரிகள் அந்த அறிக்கையில் திருத்தங்கள் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பியபோது, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஹரின் ராவல், சி.பி.ஐ. விசாரணை அறிக்கையை மத்திய அரசின் அங்கமாக உள்ள எந்த நபருடனும் பகிர்ந்து கொள்ளப்படவில்லை என உறுதிபட கூறினார். ஆனால் இதுபற்றி சி.பி.ஐ. இயக்குனர் ரஞ்சித் சின்கா தாக்கல் செய்த வாக்குமூலத்தில் சி.பி.ஐ. விசாரணை அறிக்கை, மத்திய சட்ட அமைச்சர் அஸ்வினிகுமார் விருப்பப்படி அவருடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது.

மேலும், பிரதமர் அலுவலகம் மற்றும் நிலக்கரித்துறை அமைச்சகத்தின் இணைச்செயலாளர் மட்ட அதிகாரிகளுடனும் அவர்கள் விருப்பப்படி பகிர்ந்து கொள்ளப்பட்டது என கூறப்பட்டது.. இதற்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்ததுடன் நடந்தது என்ன? என்பது பற்றி விவராமாக புதிய அறிக்கையாகத் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து இன்று உச்சநீதிமன்றத்தில் சிபிஐ இயக்குனர் ரஞ்சித் சின்ஹா 9 பக்க புதிய விசாரணை அறிக்கை தாக்கல் செய்தார்.

அதில் முந்தைய சிபிஐ விசாரணை அறிக்கையில் சில வரிகளை சட்ட அமைச்சர் அஸ்வனி குமார், பிரதமர் அலுவலக அதிகாரிகள், அரசு தலைமை வழக்கறிஞர் ஆகியோர் நீக்கினர் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது. எந்தெந்த வரிகள் நீக்கப்பட்டன? என்ன மாதிரியான மாற்றங்கள் செய்யப்பட்டன என்பதும் சிபிஐயின் புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விசாரணை அறிக்கையில் என்னால் ஏற்பட்ட திருத்தம் மற்றும் நீக்கம் ஆகியவற்றிற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன் என்றும் ரஞ்சித் சின்ஹாவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சிபிஐயின் இந்த புதிய அறிக்கையால் மத்திய சட்ட அமைச்சர் அஸ்வனிகுமாருக்கு மேலும் நெருக்கடி அதிகரித்துள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவ ...

வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு அவசியம் – ராஜ்நாத் சிங் வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு ...

ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் வெ ...

ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் வரிசையில் முதல் இடம் டிரம்ப் பதவியேற்பு விழாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் ...

ரூ 11 லட்சம் கோடி மத்திய அரசு நித ...

ரூ 11 லட்சம் கோடி மத்திய அரசு நிதி – தங்கம் தென்னரசுக்கு அண்ணாமலை பதிலடி “தமிழக திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என ...

யாழ்ப்பாணம் கலாசார மையத்திற்க ...

யாழ்ப்பாணம் கலாசார மையத்திற்கு திருவள்ளுவர் பெயர் – கவர்னர் ரவி நெகிழ்ச்சி 'யாழ்ப்பாணம் கலாசார மையத்திற்கு, திருவள்ளுவர் பெயர் சூட்டப்பட்டது, தமிழின் ...

வெளியானது பாஜக மாவட்ட தலைவர் பட ...

வெளியானது பாஜக மாவட்ட தலைவர் பட்டியல் – அண்ணாமலை வாழ்த்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கான பா.ஜ., தலைவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ...

ஜனநாயகம் தொடர்ந்து வெற்றி பெறு ...

ஜனநாயகம் தொடர்ந்து வெற்றி பெறுகிறது : மங்கீ பாரத் நிகழ்ச்சியில் மோடி பெருமிதம் ''நம் நாட்டின் தேர்தல் நடைமுறைகள் குறித்து சிலர் சந்தேகம் ...

மருத்துவ செய்திகள்

பப்பாளியின் மருத்துவக் குணம்

கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ...

காரட்டின் மருத்துவ குணம்

காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ...

நெல்லியின் மருத்துவ குணம்

நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ...