பா.ஜ.க. ஒரு ஜென்டில்மேன்

பா.ஜ.க. ஒரு ஜென்டில்மேன் தொலைக்காட்சி ஒன்றின் மைக்கை கையில் வாங்கி திடீர் நிருபரான ப.சிதம்பரம் பாஜக வின் மூத்த தலைவர் திரு ஜஸ்வந்த் சிங்கிடம் கர்நாடகாவில் பாஜகவின் தோல்விக்கு காரணம் என்ன என்று கேட்டார் ..

அதற்க்கு ஜஸ்வந்த் சிங் " அரசு ஆட்சி நடத்தவேண்டும் ..அது இல்லாவிட்டால் இப்படித்தான் முடிவு இருக்கும்" என்றார்…இது யார்க்கும் பொருந்துமல்லவா?..காங்கிரசும் இதற்க்கு உட்பட்டதுதானே?..இதை அறிந்தும் அறியாத ப.சிதம்பரம் ..ஜாஸ்வந்தை "ஜென்டில் மென் " என்றார்..

உண்மையை ஒத்துக்கொள்வதும்–ஏற்றுக்கொள்வதும், பாஜகவிற்கு எந்த தயக்கமும் எப்போதும் இல்லை. முதலில் கர்நாடக மக்கள் காங்கிரசுக்கு ஆதரவாக ஒட்டு போடவில்லை.. அப்படியென்றால்…பி.ஜே பி ஆட்சியை எதிர்த்து ஒட்டு போட்டார்களா/–இருக்காது.காரணம் காங்கிரசின் மன்மோகன் சிங் அரசாலேயே 40 அவார்டுகள் கொடுத்து பி.ஜே பி. சிறப்பாக ஆளுவதாக பட்டயம் தந்திருக்கிறார்களே..

இந்தியாவில் எந்த மாநிலமும் செய்யாத "விவசாயத்திற்கு தனி பட்ஜெட் –அதுவும் மொத்த பட்ஜெட்டில் 21 சதவீதம் நிதி ஒதிக்கி " போட்டிருக்கிறார்களே..காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் எல்லாம் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் பொது, கர்நாடகத்தில் விவாசாயிகள் தற்கொலையே இல்லை என்னும் நிலையை உருவாக்கினார்களே..

அப்படியானால் ..ஒன்றே ஒன்றுதான் இருக்கமுடியும்..அதுதான் சகோதர யுத்தம்..
அன்று … சகோதர  யுத்தம் கவுரவர்களை அழித்து நேற்று . சகோதர யுத்தம் இலங்கை தமிழனை கொன்று குவித்து ராஜபக்ஷே விற்கு மகுடம் சூட்டி மகிழ்ந்தது..
இன்று ….சகோதர யுத்தம் கர்நாடகாவை காங்கிரசுக்கு தாரை வார்த்து கொடுத்து ..2014 வரை காங்கிரசுக்கு உயிர்பிச்சை அளித்தது..

ஆம் காங்கிரசை பற்றி மக்களுக்கு தெரியும், அவர்கள் குற்ற பரம்பரையினர்–குடுமிபிடி சண்டைகாரர்கள்–நாட்டை அடமானம் வைக்கும் சண்டாளர்கள் என்று..

பாஜகவிடம் மக்கள் நிறைய எதிர்பார்க்கிறார்கள்..அவர்களுக்குள் சகோதர சண்டையை மக்கள் விரும்பவில்லை..கோபப்பட்டு, பாடம் புகட்ட்டியிருக்கிரார்கள் ..

1977 லும் இப்படித்தான்..ஜனதாகட்சி ஆட்சி ஒரு சிறந்த நிர்வாகத்தை கொடுத்தது..ரேஷனில் அரிசி, சர்க்கரை, மண்எணெய் விலை யைவிட பொது மார்க்கெட்டில் விலை குறைவாக விற்றது ஆனால் ஒருவருக்கு ஒருவர் அடித்துக்கொண்டதால், மொரார்ஜி தேசாய், ஜகஜீவன்ராம், வாஜ்பாய் போன்ற தலைவர்கள் இருந்தும், 3 ஆண்டுகளிலேயே — மக்கள் ஜனதா கட்சிக்கு எதிராக வாக்களித்தனர் ..இத்தனைக்கும், அவசரநிலை பிறப்பித்து ஒருலட்சம் பேரை விசாரணை இன்றி 22 மாதங்கள் இந்திராகாந்தி சிறையில் தள்ளியதையும் மறந்து, மன்னித்து, இந்திராவையே மக்கள் மீண்டும் தேர்ந்தெடுத்தனர்….

காரணம் ஜனதா கட்சியிடம் மக்களின் எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது..இதை நிறைவேற்றாததால், காங்கிரசுக்கு யோகம் அடித்தது..அதேநிலைதான் இன்று கர்நாடகாவில் நடந்தேறியுள்ளது..

இதை சம்பந்த பட்ட சகோதரர்கள் புரிந்து கொண்டால் சரி.

கர்நாடகா வெற்றி கான்கிரசின் முகத்தில் கடைசி புன்னகை..சோனியாவின் அரசியல் வரலாற்றில் கடைசி வெற்றி..இனி சோனியாவும் சரி..காங்கிரசும் சரி..இத்தாலிக்கு மூட்டைகட்ட வேண்டியதுதான்..

நன்றி ; எஸ்.ஆர். சேகர் எம்.ஏ.பி.எல்

பாஜக மாநிலப் பொருளாளர்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை நோய் குணமாக

முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ...

மாதுளம் பூவின் மருத்துவக் குணம்

மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ...

சின்னம்மை ( நீர்க்கோளவான் )

சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ...