சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் தாக்குதல் சம்பவத்தை காங்கிரஸ் அரசியல் ஆக்க முயற்சி செய்கிறது . மாவோயிஸ்டுகளால் ஜனநாயகத்துக்கு எப்போதும் ஆபத்து உண்டாகும் என்று பாஜக தேசிய பொதுச்செயலாளர் ராஜீவ்பிரதாப் ரூடி கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் அவர் கூறியதாவது ; சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் தாக்குதல்சம்பவத்தில் 27 பேர் உயிரிழந்தது மிகவும் அதிர்ச்சியை தருகிறது. இச்சம்பவம்தொடர்பாக அரசியல் உள்நோக்கத்துடன் காங்கிரஸ் கட்சியினர் பேசக் கூடாது.
ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டும் நேரம் இதுவல்ல. நக்சல்களை எதிர்த்துப்போராட தேசிய அளவில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும்.
பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் கட்சித்தலைவர் சோனியாகாந்தி, துணைத் தலைவர் ராகுல்காந்தி ஆகியோரின் கோபத்தை உணரமுடிகிறது.
இத்தாக்குதலுக்கு யார்பொறுப்பு என பிரதமர் மன்மோகன்சிங் கூறியிருப்பது, தேசிய அளவிலான சவாலை அரசியலாக்க முயற்சிப்பதாகும்.
ப. சிதம்பரம் மாவோயிஸ்டுகளுக்கு எதிராக ஒருதிட்டத்தை கொண்டுவந்தார். ஆனால் காங்கிரஸ் தலைவர் திக்விஜய்சிங் எதிர்ப்பால் அதை செயல்படுத்தமுடியவில்லை.
இது குறித்து காங்கிரஸ் கட்சி ஆய்வுசெய்வது அவசியமாகும். மாவோயிஸ்ட் பிரச்னை மாநிலங்களின் தனிப்பட்டபிரச்னை இல்லை. பல்வேறு மாநிலங்களை சேர்ந்ததாகும்.
இதைசமாளிக்க மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும். மாவோயிஸ்டுகளால் ஜனநாயகத்துக்கு எப்போதும் ஆபத்து உண்டாகும் என்றார் ராஜீவ்பிரதாப் ரூடி .
ஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • பார்ப்பதற்கும், உணர்வதற்கும் |
வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ... |
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.