இளைஞர்கள் விரும்பும் தலைவர்தான் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என பா.ஜ.க மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது ; தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் குறுவைசாகுபடியை தொடங்க விவசாயிகள் காத்திருக்கும் நிலையில் மேட்டூர் அணைக்கு தண்ணீர்திறந்துவிட கர்நாக அரசு தொடர்ந்து மறுத்துவருகிறது.உச்சநீதிமன்றத்தின் உத்தரவுபடி காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் அமைப்பதற்கு முன்பாக மத்திய நீர்வளத் துறை செயலர் தலைமையில் இடைக்கால அமைப்பு உருவாக்கப் பட்டுள்ளது. இந்த குழுவால் நடத்தப்பட்ட இரண்டுஅமர்விலும் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட மாட்டோம் என கர்நாடகம் ஒரேமாதிரியான பதிலை தெரிவித்துள்ளது.
தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடும்படி கர்நாடக காங்கிரஸ் கட்சிக்கு, தமிழக காங்கிரஸ் அழுத்தம்கொடுக்க வேண்டும்.இல்லையெனில் அடுத்த மக்களவை தேர்தலில் தமிழககாங்கிரஸ் அதற்கான விலையை கொடுக்கவேண்டியிருக்கும்.கூட்டணி கட்சிகளின் பலம் அல்லது எதிர்கட்சிகளின் பலவீனத்தை பயன்படுத்திதான் வளரவேண்டிய அவசியம் பா.ஜ.க.,வுக்கு இல்லை. பா.ஜ.க.,வின் பலத்தைதான் பிற கட்சிகள் நம்பியுள்ளன.
பிரதமர் பொறுப்பை ஏற்கும் அளவுக்கு திறமையான பலதலைவர்கள் பா.ஜ.க.,வில் உள்ளனர். ஆனால் காங்கிரஸ் கட்சியில் ராகுல்காந்தியை விட்டால் வேறுவேட்பாளர் இல்லை. இதனால்தான் பாஜகவை எதிர்கட்சிகளும், ஊடகங்களும் தொடர்ந்து விமர்சனம்செய்கின்றனர்.அத்வானி ராஜினாமா விஷயத்தை ஊடகம்தான் பெரிதுபடுத்துகின்றனர். பா.ஜ.க.,வை பொருத்தவரை, இளைஞர்கள் விருப்ப கூடியவராகவும், இன்றைய அரசியலுக்கு பொருத்தமானவராகவும், வளர்ச்சியில் பற்று கொண்டவராகவும் உள்ள தலைவர்தான் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார்.
இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ... |
இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.