தமிழகத்தின் பலமாவட்டங்களில், மாவோயிஸ்ட்கள் தளம் அமைத்துள்ளனர்

 தமிழகத்தின் பலமாவட்டங்களில், மாவோயிஸ்ட்கள் தளம் அமைத்துள்ளனர் தமிழகத்தின் பலமாவட்டங்களில், மாவோயிஸ்ட்கள் தளம் அமைத்துள்ளனர், இதன்காரணமாக குன்னூர், ஊட்டி, கோவை, நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களில் பாஜக.,வின் முக்கிய நிர்வாகிகள் தாக்கப்பட்டுவருகின்றனர் என்று பாஜக மாநில தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார் .

பாரதிய ஜனதா மாநிலசெயற்குழு கூட்டம், நேற்று, கிருஷ்ணகிரியில் தொடங்கியது . கூட்டத்தில், அகில இந்திய இணை பொதுஅமைப்பு செயலாளர் சதீஸ், தமிழக பாஜக மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன்,தேசியசெயற்குழு உறுப்பினர் இல.கணேசன், தேசிய செயலாளர் தமிழிசை சவுந்திர ராஜன், மாநில துணை தலைவர் ராஜா, மாநில அமைப்பு பொது செயலாளர்கள் மோகன்ராஜ், உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இதில் மாநில தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: குஜராத் முதல்வர் நரேந்திரமோடி, பாஜக தேர்தல் பிர்ச்சாரகுழு தலைவராக நியமிக்கப்பட்ட பிறகு , நாடுமுழுவதும் பாரதிய ஜனதா வினர் மிகுந்த உற்சாகத்தோடு லோக்சபாதேர்தல் பணியை துவங்கிவிட்டனர்.

பயங்கரவாதத்துக்கு எதிராக குரல்கொடுக்கும் ஒரேகட்சி பாஜக தான். இதன்காரணமாக குன்னூர், ஊட்டி, கோவை, நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களில் பாஜக.,வின் முக்கிய நிர்வாகிகள் தாக்கப்பட்டுவருகின்றனர்.பெங்களூருவில், பாஜ கட்சி அலுவலகம் அருகே, குண்டுவைத்து, வெடிக்க வைத்ததில், தமிழகத்தைசேர்ந்த பயங்கரவாதிகள் ஈடுபட்டுள்ளனர். இதன்மூலம் பயங்கரவாதிகள், தமிழகத்தில் தளம் அமைத்திருப்பது, தெரியவந்துள்ளது

தற்போது, தமிழகத்தில் கிருஷ்ணகிரி, கோவை, தர்மபுரி,சேலம், தேனி உள்ளிட்ட பல மாவட்டங்களில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் தளம் அமைத்துள்ளனர். உடனடியாக இதனை கவனிக்கவில்லை எனில் , தமிழகத்தில் பல அசம்பாவித சம்பவங்கள் நடக்கவாய்ப்புள்ளது.நாட்டில் பிரிவினைவாதிகள் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. இலங்கை தமிழர்களுக்கு ஆதரவான கூட்டத்தில், யாசின்மாலிக் போன்றவர்களை கலந்துகொள்ள செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.தமிழகம்முழுவதும் லோக்சபா தேர்தலையொட்டி, பலமாவட்டங்களில் கருத்தாய்வு கூட்டம் நடந்துவருகிறது. வரும் தேர்தலில், பா.ஜ.க, சொந்தபலத்தில் வெல்ல தயாராக உள்ளது. மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு கண்டிப்பாக அப்புறப்படுத்தவேண்டும்.இதற்காக, எங்கள் உணர்வுகளை புரிந்துகொண்டு, நாட்டுக்கு நல்ல பிரதமர்வேண்டும், என்ற எண்ணத்தோடு உள்ள கட்சிகளோடு, லோக்சபாதேர்தலில், தமிழகத்தில் பாஜக கூட்டணி வைத்துக்கொள்ளும்.என்று கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்

உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ...

அலரியின் மருத்துவக் குணம்

இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ...

நோனியின் மருத்துவ குணம்

மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ...