மோடி அலை வீசத்துவங்கிவிட்டது ”இந்து” சொல்கிறது

மோடி அலை வீசத்துவங்கிவிட்டது ”இந்து” சொல்கிறது 15 ந்தேதி 'இந்து பிசினஸ் லைன்" பத்திரிக்கையில் . என் அருமை நண்பர் எம்.ஆர்.சுப்ரமணி எழுதிய ஒரு கட்டுரை நெஞ்சை தொட்டது. பிஜேபி யை சம்பந்தப்படுத்தி.அவர் கேட்ட கேள்விகள் அர்த்தமுள்ளவைகளாக தெரிந்தது..

மோடி அவர்களை 2014 க்கான தேர்தல் பிரச்சார கமிட்டி தலைவராக போட்டதும் அச்சமயம் பார்த்து திரு. அத்வானி அவர்கள் கட்சியின் சில பொறுப்புக்களிலிருந்து விலகியதும். அதனால் எழுந்த "களயபரங்களும்- அதிர்ச்சிகளும்- கட்சிமீது விழுந்த அவமானங்களும்" அடங்கிப்போனாலும், மோடி அவர்களை அறிவித்ததும் எழுந்த "சுனாமி உற்சாகமும் தொண்டனின் விஸ்வரூபமும் " இதன் பலன்களை கட்சி உடனே பெறமுடியாமல் போய்விட்டது உண்மையே…

1.நன்றாக விளையாடிக்கொண்டிருக்கும் கிரிக்கெட் டீமின் தலைமை பொறுப்பிற்கு வெற்றிகளை குவித்த அதிக அனுபவம் கொண்டவர் என்பதற்காக சுனில் கவாஸ்கரையோ சவுரவ் கங்கூலியையோ கேப்டனாக போடமுடியுமா? இந்த கேள்வி நியாயமாக தெரிகிறதல்லவா? இதுவே அரசியலுக்கும் பொருந்துமல்லவா?

2.நாம் அத்வானி அவர்களின் அனுபவத்தை தியாகத்தை மதிக்கிறோம்…அவர்களுக்கு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் "சேர் பர்சன்"–தலமை அதிகாரி பட்டத்தை– ஐ.மூ.கூ அரசில் சோனியாவின் பதவியைப்போல — தந்து அழகு பார்க்க தயாராக இருக்கிறோம்.

பாஜகவுடன் 17 ஆண்டுகாலம் கூட்டணியில் இருந்த ஐக்கிய ஜனதா தளம் இன்று கூட்டணியை முறித்துக்கொண்டது. தற்போது சிவசேனாவும், அகாலிதளமும் மட்டுமே கூட்டணியில் எஞ்சியிருக்கிறது. இதற்குக் காரணம் மோடிக்கு புதியபதவி தந்ததே..

எஞ்சி இருக்கும் இரண்டு கட்சிகளும் தேர்தல் வரை கூட்டணியில் தொடருமா என்பது தெரியாது. வேறு கட்சிகள் சேருமா என்பதும் நிச்சயமில்லை

மோடியை பிரதமர் வேட்பாளராக பாஜக அறிவித்தால், கிட்டதட்ட 15லிருந்து 18 சதவீதமுள்ள கிறிஸ்தவ மற்றும் முஸ்லீம் ஓட்டுக்கள் பாஜகவிற்கு எதிராக விழும் அபாயம் உள்ளது..

வடகிழக்கு மாகாணம் மற்றும் தென் இந்தியாவில் பிஜேபியின் வாக்கு வங்கி மிகவும் பலகீனமாக உள்ளது.

ஆக கூட்டணி பலமில்லை–மைனாரிட்டி வாக்கு எதிராக உள்ளது–கட்சியே பலமாநிலங்களில் இல்லை..இதுதான் அரசியல் பார்வையாளர்கள் சொல்லும் கருத்து. இத்தனையும் மீறி மோடி எங்கே ஜெயிப்பார்? எப்படி ஜெயிப்பார்?

இதைத்தான் இந்துவில் நண்பர் சுப்ரமணி எழுதியுள்ளார். இப்போது மோடி அலை வீசுகிரது. இந்த அலை மேல கண்ட அத்தனை தடைகளையும் தவிடு பொடியாக்கும் – 1977இல் கட்சியே இல்லாமல்..உதிரி கட்சிகளின் கலவையாக இருந்த ஜனதா கட்சிக்கு நிகழ்ந்த–வெற்றி.. அற்புதம் மறுபடியும் அரங்கேறும்." இதுதான்…அவரின் கணிப்பு..

இதைத்தான் நான் மீண்டும் உறுதிபட கூறுகிறேன்..

கூட்ட்ணிகளின்– வாக்குவங்கி சதவீதத்தின் –கூட்டல்கள் இம்முறை–"கழித்தல்களாக" மாறும். கூடாமலே போகும். "தேர்தல் கணிப்பு பிரம்மாக்களின் கூற்றுக்கள்" இம்முறை. கம்யூட்டருக்குள் சென்று ஓடி ஒளிந்கொள்ளும். இளைஞர் பட்டாளம் நம்பும் ஒப்பற்ற.தலைவாக மோடி  திகழ்வதால். தேர்தல் முடிவுகள் பாஜகவிற்கு ஆதரவாகவும், எதிரிகளுக்கு ஆச்சர்யத்தையும், காங்கிரசுக்கு அதிர்ச்சியையும் தரும்.

இதை "இந்து " சுப்ரமணியம் சொல்லியுள்ளார். நானும் முன்பிருந்தே சொல்லிவருகிறேன்.

நன்றி ; எஸ்.ஆர். சேகர் எம்.ஏ.பி.எல்

பாஜக மாநிலப் பொருளாளர்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வாய் துர்நாற்றம் நீங்க

ஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே வந்துவிடும் . ...

அகத்திப் பூவின் மருத்துவக் குணம்

அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது.

மனதை ஒருமைப்படுத்துதல்

தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ...