தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதாதளம் விலகியதால் பா.ஜ.க.,வுக்கு எந்தபாதிப்பும் இல்லை என பாஜக மூத்த தலைவர் வெங்கய்யநாயுடு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது;
தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து ஐக்கிய ஜனதாதளம் வெளியேறியதால் பா.ஜ.க.,வுக்கு எந்தபாதிப்பும் ஏற்படாது.
பாஜகவின் பிரசாரக் குழு தலைவராக நரேந்திரமோடி நியமிக்கப்பட்டது கட்சியின் உள்விவகாரம். ஒருகட்சியின் உள் விவகாரங்களில் மற்றகட்சிகள் தலையிட முடியாது. நரேந்திரமோடி நாடு முழுவதும் பிரபலமான தலைவர். அவருக்கு மக்களிடம் மிகுந்தசெல்வாக்கு உள்ளது. அதனால் தான் அவரைக்கண்டு காங்கிரஸ் உள்ளிட்டகட்சிகள் கலக்கமடைந்துள்ளன.
2004-இல் வாஜ்பாய் அரசு பதவியி லிருந்து வெளியேறும் போது, நாட்டின் ஒட்டுமொத்தவளர்ச்சி 8.4 சதவீதமாக இருந்தது. ஆனால், 9 ஆண்டுகால காங்கிரஸ் கூட்டணி அரசில் இது 5சதவீதமாக சரிந்துள்ளது. அது போல, வாஜ்பாய் ஆட்சியில் 4 சதவீதமாக இருந்த பண வீக்கம் இப்போது 9 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஆண்டுக்கு ரூ. 3,63,000 கோடி வட்டிசெலுத்த வேண்டிய அளவுக்கு நாட்டின் கடன்சுமை அதிகரித்துள்ளது.
வாஜ்பாய் ஆட்சியில் அமெரிக்கடாலருக்கு நிகரான இந்திய ரூபாயின்_ மதிப்பு ரூ.40 முதல் ரூ. 42 ஆக இருந்தது. ஆனால், இப்போது ரூ. 58ஆக அதிகரித்துள்ள து.
எனவே காங்கிரஸ் கூட்டணியை தோற்கடிக்க மக்கள் தயாராகிவிட்டனர். எனவே, வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ்தோற்பது உறுதி என்றார்.
ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ... |
இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ... |
டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.