பிரதமர் பதவிக்கு குஜராத் முதல்வர் நரேந்திரமோடி தகுதியானவர் என்று பீகாரில் 63 சதவீதத்தினர் கருத்து தெரிவித்துள்ளனர் .
பா.ஜ.க, – ஐக்கிய ஜனதாதள கட்சிகளுக்கு இடையேயான கூட்டணிமுறிவுக்கு பின்னர் தனியார் தொலைக்காட்சி சார்பில் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. இந்த கருத்துக் கணிப்பில், மோடி பிரதமராக 63 சதவீத பேரும், நிதீஷ்குமார் பிரதமராக 24 சதவீத பேரும் ஆதரவுதெரிவித்துள்ளனர்.
கூட்டணி முறிந்துள்ள நிலையில், தற்போது தேர்தல்நடந்தால், பா.ஜ.க , 16 இடங்களிலும், ஐக்கிய ஜனதாதளம் 7 இடங்களிலும், ராஷ்டிரிய ஜனதாதளம் 11 இடங்களிலும், காங்கிரஸ் இரண்டு இடங்களிலும் வெல்லும் என்று கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. மேலும், பா.ஜ.க., ஐக்கிய ஜனதாதளம் கூட்டணி முறிவால், சட்ட சபை தேர்தலில் லாலுவுக்கு பலன்கிடைக்கும் என்றும் தெரியவந்துள்ளது. சட்டசபைதேர்தல் நடத்தப்பட்டால் லாலு 96 இடங்களிலும் , நிதீஷ் 52 இடங்களிலும், பா.ஜ.க., 73 இடங்களிலும், காங்கிஸ் 4 இடங்களிலும் வெற்றி பெரும் என்று கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. .
கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ... |
ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ... |
விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.