உத்தரகாண்டில் சிக்கித்தவித்த குஜராத் பக்தர்கள் 15 ஆயிரம்பேரை குஜராத் முதல்வர் நரேந்திரமோடி மீட்டுள்ளார். உத்தராகாண்ட் மாநிலத்தில் பெய்த பலத்தமழையால் வரலாறு காணாத வெளளப்பெருக்கு, நிலச்சரிவுகாரணமாக பேரழிவு ஏற்பட்டுள்ளது. இதில்சிக்கி ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். 12 ஆயிரம்பேரை காணவில்லை.
ருத்தர பிரயாகை, உத்தர காசி, சமோலி, ஆகிய மாவட்டங்களில் 94 பாலங்களை வெள்ளம் அடித்துசென்றுள்ளது. பத்ரிநாத், கேதார்நாத் ஆகிய புண்னியத்தலங்களுக்கு வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் யாத்திரை சென்றனர். இவர்கள் இந்த பேரழிவில் சிக்கியுள்ளனர்.. இதில் குஜராத் மாநிலத்தைச்சேர்ந்த 15 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து உத்தரகாண்ட் மாநிலத்திற்கு நேரில்சென்று தனது மாநில பக்தர்களை மீட்க மோடி முடிவுசெய்தார். இதற்கு மத்திய உள்துறைஅமைச்சர் ஷிண்டே எதிர்ப்புதெரிவித்தார். மீட்புபணிகள் நடக்கும் இடத்துக்கு வி.வி.ஐ.பி.க்கள் சென்றால் மீட்புபணிகளில் இடையூறு ஏற்படலாம். என ஷிண்டே கூறியதை ஏற்காத மோடி அதிரடியாககளத்தில் இறங்கினார்.
குஜராத்திலிருந்து தனிவிமானத்தில் டேராடூன் சென்றார். அவருடன் சிலஅதிகாரிகளும் உடன் சென்றனர். முதல்கட்டமாக எந்தெந்த பகுதிகளில் குஜராத் பக்தர்கள சிக்கியுள்ளனர் என்பதை கண்டறிந்தார். பிறகு அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி ஒருங்கிணைப்பு குழு உருவாக்கப்பட்டது. ராணுவத்தினர் உதவியுடன் குஜராத்பக்தர்கள் 15 ஆயிரம் பேர் மீட்கப்பட்டனர். பிறகு அவர்கள் பக்தர்களை டெல்லிக்கு அனுப்பினர். அங்கிருந்து விமானம்மூலம் குஜராத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். 15 ஆயிரம் பேரை நரேந்திரமோடி 2 நாட்களில் மீட்டார் . மேலும் மோடியின் விறுவிறு மீட்பு பணியை பார்த்த பிறகே மத்திய மாநில அரசுகள் மீட்ப்பு பணியில் தீவிரம் காட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.
முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ... |
முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ... |
ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.