பாஜக தேர்தல் பிரசாரக்குழு தலைவராக நரேந்திர மோடி நியமிக்கப்பட்டுள்ளதும், அவருக்கு நெருக்கமான அமித்ஷா, உ.பி., பா.ஜ., பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாலும், வரும் லோக்சபா தேர்தலில், அம்மாநிலத்தில், பா.ஜ.க,வுக்கு பெருவாரியான வெற்றிகிடைக்க வாய்ப்பாக அமைந்துள்ளது என்று , உ.பி., அரசியல் ஆய்வாளர் கூறுகின்றனர்.
லக்னோ பல்கலைக் கழக அரசியல் அறிவியல்துறையின் பேராசிரியர், அஷதோஷ் மிஸ்ரா கூறியதாவது: நாட்டின் மிகஅதிக எம்பி.,க் களை கொண்டமாநிலமான உத்தர பிரதேசத்தில், பா.ஜ.க, அதிக இடங்களில் வெற்றிபெற்ற ஆண்டுகளில்தான், மத்தியில் அந்தகட்சி ஆட்சி அமைத்துள்ளது. அந்தமாநிலத்தில், மொத்தமுள்ள, 85 லோக்சபாதொகுதிகளில், 1996ம் ஆண்டு, 52 இடங்களிலும், 1998ல், 57 இடங்களிலும், பா.ஜ., வெற்றிபெற்றது. 2004ல், 10 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது.
உ.பி.,யை கைப்பற்றவேண்டும் என்ற நோக்கம், பா.ஜ.,வுக்கு அதிகமாக உள்ளது. எனவே தான், பா.ஜ., தேர்தல்பிரசார குழுவின் தலைவரும், குஜராத் முதல்வருமான, நரேந்திரமோடிக்கு நெருக்கமானவரான, அமித்ஷா, மாநில, பா.ஜ., பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.மாநில நிலவரத்தை முழுமையாக ஆராய்ந்து, அதை மோடிக்கு தெரிவிக்கும் அமித்ஷா, மோடியின் பிரசாரயுக்திகளால், அதிக இடங்களில் வெற்றிக்கு வழி ஏற்படுத்துவார்.என்று அந்த பேராசிரியர் தெரிவித்துள்ளார்.
உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ... |
இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ... |
நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.