காஷ்மீர் இளைஞர்கள், நாட்டின்வளர்ச்சியில் பங்கேற்க ஆர்வமாக இருக்கின்றனர் . அவர்கள் மனதில் உள்ள காயங்களை ஆகற்றி, அவர்களை தேசியநீரோட்டத்தில் இணைக்கவேண்டும், வாஜ்பாய் மீண்டும் பிரதமராகி இருந்தால், காஷ்மீர்பிரச்னைக்கு, சுமுகதீர்வு கண்டிருப்பார்” என்று , குஜராத் முதல்வர், நரேந்திரமோடி பேசியுள்ளார் .
ஷியாமபிரசாத் முகர்ஜியின், 60வது நினைவு தினத்தையொட்டி, பஞ்சாப் மாநிலம், பதன் கோட்டில் நடந்த, பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில், நரேந்திரமோடி பேசியதாவது:
வாஜ்பாய், பிரதமராக இருந்த போது, பல நல்ல திட்டங்களை நிறைவேற்றினார். உடல்நலக் குறைவு காரணமாக, அவரால், தீவிர அரசியலில் ஈடுபடமுடியவில்லை. பா.ஜ.க., மத்தியில், மீண்டும் ஆட்சிக்குவந்தால், வாஜ்பாய் விட்டுச்சென்ற பணிகள், முழுவீச்சில் நிறைவேற்றப்படும்.
காஷ்மீர் விவகாரத்தில், காங்கிரஸ் தலைமையிலான, மத்திய அரசின்செயல்பாடும், கொள்கையும், தோல்வி அடைந்துவிட்டன. காஷ்மீர் மக்களின் மனதில் இடம்பெற வேண்டும் என்று வாஜ்பாய் விரும்பினார்.
வாஜ்பாய் மீண்டும் பிரதமராகி இருந்தால், காஷ்மீர்பிரச்னைக்கு, சுமுகதீர்வு கண்டிருப்பார். காஷ்மீர் இளைஞர்கள், நாட்டின்வளர்ச்சியில் முக்கிய பங்காற்றவேண்டும் என்று , விரும்புகின்றனர். அவர்களை, தேசியநீரோட்டத்தில் இணைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். துப்பாக்கி குண்டுகளால், ரத்தம்தான் சிந்தும்; யாருடைய வாழ்க்கைக்கும், அதனால், பயன்இல்லை. தற்போது, மத்தியஅரசுக்கு, மன்மோகன்சிங், சோனியா என்று , இரண்டு அதிகாரமையங்கள் உள்ளன. இதில், எது, உண்மையான அதிகார மையம் என்று தெரியவில்லை என்றார்
மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ... |
இதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை ... |
மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.