மும்பையில் 4 லாரிகளில் 150 மூட்டைகளில் கட்டி கடத்தப்பட்ட ரொக்கப் பணம் மற்றும் தங்கநகைகள், வைர நகைகளை புலனாய்வு அதிகாரிகள் மடக்கி பிடித்து பறிமுதல் செய்துள்ளனர். இதன் மொத்தமதிப்பு ரூ.2000 கோடிக்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது.
இது மிகப் பெரிய தொகை என்று தேசியபுலனாய்வு ஏஜன்சியும் வருமான வரித் துறையினரும் தெரிவித்துள்ளனர்.
லாரிகளில் கொண்டுவரப்பட்ட 150 மூடைகளில் பணம், தங்கநகைகள், வைர நகைகள் எங்கிருந்து எடுத்து வரப்பட்டு எந்த இடத்திற்கு கொண்டுசெல்லப்படவிருந்தது என்பதை அறிய புலனாய்வு ஏஜன்சி தீவிரமாக விசாரணை நடத்திவருகிறது. பணம் மற்றும் நகை மூட்டைகளை ஏற்றிவந்த இந்தலாரிகள் நேற்றுமுன்தினம் இரவு சரியாக 9.30 மணிக்கு மும்பை மத்திய ரயில்நிலையம் அருகே வைத்து பறிமுதல் செய்யப்பட்டது.
மும்பையில் இருந்து குஜராத்மெயில் ரயிலில் ஏற்றி ஆமதாபாத் மற்றும் இதர நகரங்களுக்கு கொண்டுசெல்லப்பட இருந்தவைகள் என்று வருமான வரித் துறை இயக்குனர் ஜெனரல் ஸ்வந்த்ராகுமார் நேற்று மும்பையில் நிருபர்களுக்கு பேட்டிஅளிக்கையில் தெரிவித்தார். இந்த லாரிகளை மடக்கி சோதனையிட்ட போது அதில் 150 மூடைகள் இருந்தன. இதை புலனாய்வு மற்றும் வருமான வரித் துறையினர் அவிழ்த்து பார்த்த போது பணமும் நகைகளுமாக இருப்பதைபார்த்து அதிர்ந்துபோனர். இந்த கடத்தல் பணத்திற்கும் தீவிரவாதத்திற்கும் தொடர்புபிருக்குமோ என்ற சந்தேகமும் ஏற்பட்டிருப்பதாக தன்னை அடையாளம் கூறிக்கொள்ளவிரும்பாத புலனாய்வுத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ... |
மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.