திடீரென ஏழைமக்கள் குறைந்து விட்டனர். ஏமாற்று வேலை

 திடீரென ஏழைமக்கள் குறைந்து விட்டனர். ஏமாற்று வேலை மத்திய திட்டக் கமிஷன் வெளியிட்டுள்ள, வறுமைகோட்டிற்கு கீழே வாழும் ஏழை மக்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது என்ற புள்ளி விவரம், ஏழைகளை வேண்டும்மென்றே வஞ்சிக்கும் மத்திய அரசின் சதித் திட்டம் என, பாஜக கண்டித்துள்ளது

.
மான்டேக்சிங் அலுவாலியாவை துணைத் தலைவராக கொண்ட மத்திய திட்டக் கமிஷன், நேற்று முன்தினம், புள்ளிவிவர அறிக்கைஒன்றை வெளியிட்டது. அதில், நாட்டில் ஏழைகள் எண்ணிக்கை குறைந்துவிட்டது; மக்களின் வருமானம் அதிகரித்துவிட்டது என்ற, ரீதியில் புள்ளி விவரங்கள் இடம் பெற்றிருந்தன. அந்த தகவல் முழுவதும்பொய் என, மறுத்துள்ள பா.ஜ., செய்தித்தொடர்பாளர், பிரகாஷ் ஜாவடேகர் கூறியதாவது:

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, ரங்கராஜன்கமிட்டி, நாட்டின் ஏழைமக்கள் தொடர்பான கணக்கெடுப்பை நடத்தி கொண்டிருக்கிறது. இந்நிலையில், திடீரென, ஏழைமக்கள் குறைந்து விட்டனர்; மக்களிடம் பணப் புழக்கம் அதிகரித்துவிட்டது என, மத்திய திட்டக் கமிஷன் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில் உள்நோக்கம் இருப்பதாக, நாங்கள் சந்தேகிக்கிறோம்.

தினமும், 34 ரூபாய்க்குமேல் சம்பாதிப்பவர்கள், வறுமைகோட்டிற்கு மேலானவர்கள் என, காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு., கூட்டணி அரசு தெரிவிக்கிறது. 34 ரூபாயைவைத்து, ஒரு நாளை நடத்தமுடியுமா? அப்படி யாராவது இருந்தால், அவர்களை காண்பிக்கவேண்டும். ஏழைகள் எண்ணிக்கை குறைந்துவிட்டது; வறுமை கோட்டிற்குகீழே உள்ளவர்கள் எண்ணிக்கை வீழ்ச்சி அடைந்துவிட்டது என்று தெரிவிப்பதை, ஏழைகளுக்கு பலன்கள்கிடைக்காமல் செய்வதற்கான சதித்திட்டமாக நாங்கள் நோக்குகிறோம்.

விலைவாசி உயர்வால், அல்லாடும் நாட்டுமக்கள், இந்த அறிக்கையை பார்த்து சிரிக்கின்றனர். இந்த அறிக்கை, அரசியல்மோசடித்தனம். சமீபத்தில் வெளியான, அர்ஜுன் சென்குப்தா கமிட்டி அறிக்கையின்படி, நாட்டில், 70 சதவீதத்திற்கும் மேற்பட்டோர், வறுமைகோட்டிற்கு கீழே உள்ளனர்.

நிலைமை இவ்வாறு இருக்க, தாங்கள்மேற்கொண்ட பொருளாதார நடவடிக்கைகளால், நாட்டில் ஏழைகள் இல்லாமல் போய் விட்டனர் என, மத்திய அரசும், திட்டக் கமிஷனும் தெரிவித்திருப்பது, ஏழைகளை வஞ்சிக்கும்செயல். இவ்வாறு, பிரகாஷ் ஜாவடேகர் கூறியுள்ளார். இவ்வாறே, தேசியவாத காங்கிரஸ், மார்க்சிஸ்ட், பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளும், மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்திருக்கின்றன

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

அழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க

சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ...

மூலிகை பற்பொடி தயாரிக்கும் முறைகள்

1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ...

ஜலதோஷம் குணமாக

கடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு எடுத்து கொள்ள ...