குஜராத் முதல்வர், நரேந்திரமோடி, குஜராத்தை விட்டு, பிறமாநிலங்களில் போட்டியிட விரும்பினால், பீகாரின் நாலந்தாதொகுதியில் போட்டியிடவேண்டும்; பீகார் முதல்வர், நிதிஷ்குமாரின் சொந்ததொகுதியான நாலந்தாவில், மோடிக்கு ஆதரவு அதிகம் உள்ளது, என்று பீகார் மாநிலத்தைச் சேர்ந்த, பாஜக முக்கிய தலைவர், சி.பி.தாக்கூர் தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க, தேர்தல் குழுத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ள, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, உ.பி.,யின் , வாரணாசி மற்றும் லக்னோ தொகுதிகளில் போட்டியிடவேண்டும் என, பாஜக.,வினர் விரும்புகின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து, பா.ஜ.க., மூத்த தலைவர்களில் ஒருவரான, சிபி.தாக்கூர் கூறியதாவது:நாலந்தாதொகுதியில், மோடிக்கு ஆதரவுபலமாக உள்ளது. குஜராத்தைவிட்டு, பிற மாநிலங்களில் உள்ள, ஏதாவது ஒருதொகுதியில் போட்டியிட வேண்டும் என, மோடி விரும்பினால், பீகாரின் நாலந்தாவில் போட்டியிடவேண்டும் என்று அவர் கூறினார்.
சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ... |
நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.