காஷ்மீர் எல்லையில் இந்தியவீரர்கள் 5பேரை பாகிஸ்தான் ராணுவம் சுட்டுக் கொன்ற சம்பவத்திற்கு பாதுகாப்புஅமைச்சர் ஏகே.அந்தோணி அளித்த முரண்பட்ட அறிக்கைக்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
இந்த அமளி ,கொந்தளிப்பான சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் , உணவுபாதுகாப்பு மசோதாவை இப்போது தாக்கல்செய்வது முக்கியமா? எனவும் மத்திய அரசுக்கு சுஷ்மா ஸ்வராஜ் ஆவேசமாக கேள்வி எழுப்பினார். காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நடத்தியதாக்குதல் நடத்திய விவகாரத்தில் பாதுகாப்பு துறை அமைச்சர் ஏகே. அந்தோணியும், ராணுவமும் முரண்பட்டதகவலை அறிக்கையாக வெளியிட்டனர். பின்னர் அதில் திருத்தம்செய்யப்பட்ட விவகாரம் எதிர்கட்சிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்று கடும்அமளியை ஏற்படுத்தியது. முரண்பட்டதகவலை வெளியிட்ட அந்தோணி இதுகுறித்து விளக்கம் தர வேண்டும் என்றும், அவர் பதவி விலகவேண்டும் என்றும் எதிர்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக பேசிய மக்களவை எதிர்கட்சி தலைவரும், பாஜக மூத்த தலைவருமான சுஷ்மாஸ்வராஜ், “எல்லை பாதுகாப்பைவிட உணவுபாதுகாப்பு மசோதா முக்கியமானதா?” என கேள்வி எழுப்பினார். மேலும் பாதுகாப்புத்துறை அமைச்சர் அந்தோணி மாநிலங்களவையில் அளித்த விளக்கத்தினால் திருப்தி அடைய முடியாது என்றும், அவர் மக்களவைக்கும் வந்து தாம்அளித்த முரண்பாடான அறிக்கைக்காக மன்னிப்புகோர வேண்டும் என்றும் சுஷ்மா வலியுறுத்தினார். ஆனால் அந்தோணி அவைக்கு வராததை தொடர்ந்து எதிர்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை நாள்முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.
ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ... |
முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ... |
Leave a Reply
You must be logged in to post a comment.