ஆந்ராவை கலக்கிய மோடி

 சினிமாவிலும், அரசியலிலும், ஒவ்வொரு கால கட்டத்திலும் புதுபுது ஹீரோக்கள் தோன்றுவார்கள். இந்திய அரசியலில் நேரு, இந்திரா, ராஜீவ், வாஜ்பாய் என்று குறிப்பிட்ட சில தலைவர்கள் மக்கள் மனதில் ஹீரோக்களாக இடம் பிடித்து இருந்தனர்.

இப்போதைய அரசியல் சூழ்நிலையில் மோடி மந்திரம் ஏதோ ஒரு வகையில் மக்களை ஈர்த்துள்ளது. குஜராத் முதல்– மந்திரியான நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படும் என்ற நிலையில் ஐதராபாத் நகரில் இருந்து தனது பிரசாரத்தை தொடங்கி இருக்கிறார்.

ஐதராபாத்தின் மிகப்பெரிய லால்பகதூர் ஸ்டேடியத்தில் மோடி பொதுக்கூட்டம் நடந்தது. காலை 9 மணி முதலே ஆந்திர மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் கூட்டம் கூட்டமாக படையெடுத்தார்கள். நேரம் செல்ல, செல்ல அலை அலையாய் திரண்ட கூட்டத்தால் நகரமே போக்குவரத்து நெரிசலில் சிக்கி விழி பிதுங்கியது. மொத்த போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டது.

65 ஆயிரம் பேர் உட்காரும் வசதி கொண்ட அந்த ஸ்டேடியத்தில் 12.30 மணிக்கே கூட்டம் நிரம்பி வழிந்தது.

ஏற்கனவே ஒரு லட்சத்து 25 ஆயிரம் பேர் டிக்கெட் வாங்கி இருந்தனர். எனவே ஸ்டேடியத்தின் அருகில் உள்ள நிஜாம் கல்லூரி மைதானம் மற்றும் ஒரு திடல் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அங்கு மிகப் பெரிய எல்.சி.டி. திரை மூலம் பொதுக்கூட்டத்தை பார்க்க ஏற்பாடு செய்திருந்தனர். அந்த திடல்களும் நிரம்பி வழிந்தது.

காலை 10.30 மணியளவில் தனி விமானத்தில் வந்த நரேந்திரமோடி நேராக ஒரு நட்சத்திர ஓட்டலுக்கு சென்றார்.

அங்கு கட்சி நிர்வாகிகளிடம் மதிய உணவுக்கு ஆந்திராவின் பாரம்பரிய உணவு ஏற்பாடு செய்யும்படி கேட்டு கொண்டார்.

சாதம், சோட்குரா (புளிச்ச கீரை), பருப்பு பொடி, நெய் கலந்த உணவை ருசித்து சாப்பிட்டார்.

ஓட்டலில் தங்கி இருந்த நரேந்திரமோடியை திரை உலக பிரபலங்கள், தொழில் அதிபர்கள், முக்கிய பிரமுகர்கள் சந்தித்து பேசினார்கள்.

அதன் பிறகு பொதுக்கூட்ட மேடைக்கு மோடி வந்தார். அவர் மேடையில் நின்றபடி கூட்டத்தை பார்த்து கை காட்டியதும் திரண்டிருந்த கூட்டத்தினர் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

மேடையின் ஒரு புறத்தில் சுவாமி விவேகானந்தரின் பிரமாண்ட கட் அவுட்டும் இன்னொரு புறத்தில் வல்லபாய் பட்டேல் கட்– அவுட்டும் வைக்கப்பட்டிருந்தது.

சிகாகோவில் விவேகானந்தர் சகோதர சகோதரிகளே என்று பேச தொடங்கி அமெரிக்கர்களை கவர்ந்தது போல் மோடியும் பேச எழுந்ததும் தெலுங்கில் பூதரா, பூதரி (சகோதர சகோதரிகளே) என்று தொடங்கி 2 நிமிடங்கள் தெலுங்கில் பேசினார். அதை கேட்டதும் கூடியிருந்த கூட்டத்தினரின் மகிழ்ச்சி ஆரவாரம் அடங்க சுமார் 5 நிமிடம் ஆனது.

கூட்டத்தில் இளைஞர்களும், இளம்பெண்களும் அதிக அளவில் திரண்டு இருந்தனர். மோடி உணர்ச்சிகரமாகவும், ஆவேசமாகவும் தனது கருத்துக்களை வெளிப்படுத்தியபோது இளைஞர்கள் கை தட்டி, மகிழ்ச்சி தெரிவித்தனர்.

மக்கள் மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் வாழ ஏழுமலையானை பிரார்த்திக்கிறேன் என்று குறிப்பிட்ட மோடி காங்கிரஸ் அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார். இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதை பற்றியும், அதில் காங்கிரஸ் அரசின் மென்மையான போக்கு பற்றியும் ஆவேசமாக பேசிய மோடியின் கருத்துக்கள் அனைவரையும் கவர்ந்தது.

இந்திரசேனா ரெட்டி என்ற 83 வயது சுதந்திர போராட்ட தியாகி மோடியை பார்ப்பதற்காக முன் வரிசையில் அமர்ந்து இருந்தார். அவரை மேடைக்கு அழைத்து கவுரவித்து அவரது காலில் விழுந்து ஆசி பெற்றார்.

அதேபோல் பஞ்சாபில் வசிக்கும் தமிழ் பெண்ணான மேரிசிங் என்ற மூதாட்டியும் மோடியை பார்க்க வந்திருந்தார். அவரையும் மேடைக்கு அழைத்து காலில் விழுந்து ஆசி பெற்றார். இது கூட்டத்தில் இருந்தவர்களை நெகிழ வைத்தது.

தனது பேச்சை முடிக்கும்போது ஆம் நம்மால் முடியும் என்று கூட்டத்தினரை உற்சாகப்படுத்தினார்.

தென் இந்தியாவில் இருந்து தனது பிரசாரத்தை தொடங்கிய மோடி ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவையும் தமிழகத்தில் முதல்– அமைச்சர் ஜெயலலிதா ஆட்சியையும் வெகுவாக பாராட்டினார். காங்கிரசை வீழ்த்த அனைவரும் ஒன்று திரள்வோம் என்று அறைகூவல் விடுத்தனர்.

ஒட்டு மொத்த ஆந்திராவையும் ஒரே நாளில் கலக்கிய மோடி கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கட்சியை பலப்படுத்துங்கள் அலுவலகத்தில் உட்கார்ந்தால் கட்சி வளராது. எந்த கட்சியுடன் கூட்டணி வெற்றி பெறுவோம் என்று நினைப்பதை தள்ளி வையுங்கள் மக்களோடு மக்களாக பணியாற்றுங்கள். வீடு வீடாக செல்லுங்கள் பணமும் அறிக்கையும் வெற்றியை தராது. ஒவ்வொரு 100 வாக்காளர்கள் இருக்கும் இடத்திலும் கமிட்டி போட்டு மக்களை சந்தியுங்கள்.

120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசினாலும் சைக்கிள் டியூப்புக்குள் காற்று நிரம்பாது. நாம்தான் காற்றை அடைக்க வேண்டும் என்றார்.

நன்றி ; மாலை மலர்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மகாராஷ்டிரா மாநிலத்தின் முதலம ...

மகாராஷ்டிரா மாநிலத்தின் முதலமைச்சர் பதவி முடிவு பிரதமரின் முடிவே இறுதியானது -ஏக்நாத் ஷிண்டே மஹாராஷ்டிராமாநிலத்தில் முதலமைச்சராகபணியாற்றியதில்திருப்திகரமாகவும், தாம் பொதுவான மனிதர்கள் என்றும் இடைக்கால ...

மகாராஷ்டிர அறிந்து கொள்ள வேண்ட ...

மகாராஷ்டிர அறிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் மகாராஷ்டிர மாநிலத் தேர்தல்களில் மஹாயுதி அணி வெற்றி, MVA ...

முக்கிய திட்டங்களுக்கு மத்திய ...

முக்கிய  திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் இந்தியாவில் இயற்கை வேளாண்மையை மேம்படுத்து வதற்கான திட்டம் உள்ளிட்ட ...

குழந்தை திருமணம் இல்லாத இந்திய ...

குழந்தை திருமணம் இல்லாத இந்தியாவை உருவாக்கும் வகையில் அன்னபூர்ணா தேவி இன்று பால் விவாகம் முகத் பாரத் தேசிய இயக்கத்தை தொடங்கி வைக்கிறார் குழந்தை திருமணம் இல்லாத இந்தியாவை உருவாக்கும் வகையில் மத்திய ...

தமிழக கூட்டுறவு வங்கிக்கு அமித ...

தமிழக கூட்டுறவு வங்கிக்கு அமித்ஷா விருது வழங்கினார் டில்லியில் சர்வதேச கூட்டுறவு ஆண்டு விழா நேற்று நடந்தது. ...

அரசியலமைப்பு சட்டத்திற்கு உட் ...

அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு எனது  கடமைகளை செய்கிறேன் – பிரதமர் மோடி '' யாருடைய அதிகார வரம்பையும் மீறாமல், அரசியலமைப்பு சட்டத்திற்கு ...

மருத்துவ செய்திகள்

கொடிமுந்திரிப் பழத்தின் பயன்

கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ...

முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க

வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ...

தொட்டாற்சிணுங்கியின் மருத்துவக் குணம்

இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ...