கல்வி உதவித் தொகை வழங்குவதில் மத்திய, மாநில அரசுகள மதபாகுபாடு காட்டக்கூடாது என்றும், இதை ஊக்குவித்தால் கல்விக்கூடங்கள் மதமாற்ற தலங்களாகிவிடும் என்றும் , பாஜக மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மதுரை ஜீவாநகரில் வியாழக்கிழமை பா.ஜ.க இளைஞரணி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் மேலும்பேசியது:
நாட்டின்வளம் அனைவருக்கும் சரிசமமாக கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதற்காகவே, இந்துமதத்தில் உள்ள பல்வேறு பிற்பட்ட ஜாதியினருக்கும் சலுகைகள் கிடைக்க அம்பேத்கர் வகைசெய்தார்.
அதேசமயம் கிறிஸ்தவர், முஸ்லிம்களில் ஜாதிபிரிவுகள் கிடையாது என்பதால், அவ்வாறு சலுகை வழங்கப்படவில்லை. எனவே, மதஅடிப்படையில் பாகுபாடு காட்டப்பட வில்லை.
ஆனால், எப்படியாவது கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களின் ஓட்டுகளைபெறுவதற்காக காங்கிரஸ் அரசு, அவர்களிடையே ஜாதிகளை உருவாக்கி, சலுகைகளை அளித்துவருகின்றது. அதுவும், இந்துக்களுக்கு வழங்கியதில் இருந்து பிடுங்கிக்கொடுத்துள்ளனர்.
கிறிஸ்தவர்களுக்கோ, முஸ்லிம்களுக்கோ சலுகை தரக்கூடாது என நாங்கள் கூறவில்லை. 85 சதவீதம் உள்ள இந்துக்களில் ஏழைமாணவர்கள் படிக்கக் கல்வி உதவி செய்யக் கூடாதா என்பதுதான் எங்களதுகேள்வி. முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், புத்தர்கள், பார்சி என 5 வகையான மதசிறுபான்மை குழந்தைகளுக்கு அரசு சலுகை வழங்கிவருகிறது. ஆனால், ஒரு இந்துக்குக்கூட வழங்கப்படவில்லை.
1 முதல் 5ஆம் வகுப்புவரையில், சிறுபான்மை மாணவர்களுக்கு இந்துமாணவர்களை காட்டிலும் 3 மடங்கு அதிக உதவிகிடைக்கிறது. இதுபோல், உயர்நிலை, மேல்நிலை, கல்லூரிமாணவர்கள் வரையிலும் நிதிவழங்குவதில் அதிகவேறுபாடு உள்ளது. இந்த வேறுபாடு களையப்படவேண்டும்.
சிறுபான்மை மாணவர்களுக்கு ஈடாக ஏழை இந்துமாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை கிடைத்தாகவேண்டும். இல்லையேல், பள்ளிக்கூடங்கள் மதமாற்ற தலங்களாகிவிடும் என்றார்.
கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ... |
ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ... |
ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ... |
Leave a Reply
You must be logged in to post a comment.