சமீபத்திய கணக்கெடுப்புகளின்படி, வளர்ந்து வரும் உலகச் சூழலுக்கு ஏற்ப அடுத்த 20 ஆண்டுகளில், இந்தியாவிற்கு 500 புதிய மாநகரங்களைக் கட்டமைப்பது அவசியமாகிறது. ஆனால், மின்சாரம், குடிநீர், சுகாதாரம், வீட்டுவசதி, போக்குவரரத்து ஆகிய தேவைகளைப் பூர்த்தி செய்வதில் நடப்பு கட்டமைப்பு வசதிகள் பின்தங்கியே உள்ளன. பெருநகர வளர்ச்சி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டில் குஜராத் மாநில வெற்றி, இந்த வகையில் நாட்டிற்கே எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
இத்தகைய வெற்றியினால், வெறும் 5% மக்கட்தொகையையும், 6% நிலப்பரப்பையும் மட்டுமே கொண்ட குஜராத், நாட்டின் 25% மொத்த ஏற்றுமதி, 17% தொழிற்சாலை உற்பத்தி, 37% துறைமுக சரக்குகளைக் கையாள்தல் என நாட்டிற்கே முன்னோடியாகத் திகழ்கிறது.
எப்படி இது சாத்தியமானது? பெருநகர வளர்ச்சி, மின்சாரம், குடிநீர், போக்குவரத்து என அனைத்துத் துறைகளிலும் குஜராத் வெற்றி நமக்குத் தரும் படிப்பினைகள் இதோ:
மனிதவள மேம்பாடு, பல்துறை முதலீடு மற்றும் நல்ல வாழ்க்கைத் தரத்துக்கு மாநகரங்கள் மையமாக விளங்குகின்றன. இருக்கின்ற நகரங்களின் முன்னேற்றம் மற்றும் புதிய மாநகரங்களின் கட்டமைப்பு இரண்டுமே பெருநகர வளர்ச்சிக்கு இன்றியமை யாததாகிறது. உட்கட்டமைப்பு, ஆட்சியமைப்பு, முறைப்படுத்துதல் போன்ற சவால்களை புதிய மாநகரங்கள் எதிர்நோக்கியுள்ளன. இதனைக் கருத்தில் கொண்டே, குஜராத் சிறப்பு முதலீட்டுப் பகுதிகளை, நாட்டிலேயே முன்னோடியாகச் செயல்படுத்தி வருகிறது. SIR ACT எனும் சட்டத்தின் மூலம் சுயாட்சி, அதிகாரத்துடன் கூடிய பதிமூன்று சிறப்புப் பெருநகரங்களை உருவாக்கி வருகிறது.
FLAGSHIP DHOLERA PROJECT குறிப்பிடத்தக்க ஒன்றாகும். திட்டமிடப்பட்ட சுமார் 2 மில்லியன் குடியாளர்களோடு DHOLERA நாட்டின் சிறந்த 15 மாநகரங்களில் ஒன்றாக விளங்கும். இதுபோல் திட்டமிடப்பட்ட சண்டிகரை விட இருமடங்கு பெரிதாக அமையும். நெடுஞ்சாலைகள் மற்றும் அகமதாபாத் போன்ற மாநகரங்களுடன் நேரடி இணைப்புச் சாலைகளுடன், தொழில்நுட்ப வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டு வருகிறது.
GUJARAT INTERNATIONAL FINANCE TECH CITY – 986 ஏக்கர் பரப்பளவில் சுற்றுச்சூழலையும் கணக்கில் கொண்டு செயல்படுத்தப்படுகிற மற்றொரு திட்டமாகும். முடியும் தருவாயில் உள்ள இத்திட்டம் தொழில் முனைவோருக்கும், குடிமக்களுக்கும் சிறந்ததொரு வாய்ப்பாக அமையும்.
இருக்கின்ற மாநகரங்களை மேம்படுத்துவதில் அகமதாபாத் சிறந்த உதாரணமாகும். சாபர்மதி நதிக்கரை பாரிஸ், லண்டன்,போன்ற உலகத் தரமிக்க பெருநகரங்களுக்கு இணையாக உருமாற்றப்பட்டுள்ளது. அகமதாபாத் விரைவுப் பேருந்துத் திட்டம் நாட்டிலேயே சிறந்த சாலைப் போக்குவரத்துக் கழகமாக விளங்கி வருவதோடு, சுற்றுச்சூழல் மாசுபடாமல் இயங்கும் பெருநகரப் போக்குவரத்துக்கான விருதையும் வென்ற ஒரே இந்திய மாநகரமாகத் திகழ்கிறது(ITDP(USA)),
மின்சாரம்: விவசாயம், வீடுகள், தொழிற்சாலை யாவிற்கும் தரமான, தொடர் மின்சாரத்தை வழங்குவதில் குஜராத் முன்னோடியாகத் திகழ்கிறது. மாசில்லா மின்சார உற்பத்தியிலும் நாட்டிற்கே முன்மாதிரியாக விளங்குகிறது. நாட்டின் மொத்த சூரியமின்உற்பத்தியில் குஜராத் 2/3 பங்கு வகிக்கிறது. பகிர்மான இழப்பைக் குறைக்கவும், மின்திருட்டைத் தடுக்கவும் சிறப்புக் கண்காணிப்பு நிலையங்களும், சமுதாயத் ததகவல் மையங்களும் தொடங்கப்பட்டு மின்வாரியம் லாபகரமாக இயங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் விளைவாக 24 மணிநேர தரமான, மும்முனை மின்சாரம் கடைக் குடிமகனுக்கும் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மின்பகிர்மான இழப்பு 35%ல் இருந்து 20% மாகக் குறைக்கப்பட்டுள்ளது. மின்தேவை அதிகமுள்ள மற்ற மாநிலங்களில் தட்டுப்பாடு நிலவும்போது, குஜராத் மட்டும் மின்மிகை மாநிலமாகத் திகழ்கிறது. அதேபோல், நாட்டிலேயே இரண்டு திரவ இயற்கை எரிவாயு முனையங்கள் மற்றும் தனியார் பங்களிப்புடனான 2400 கிமீ நீள எரிவாயுப் பகிர்மான்கள் என குஜராத் ஒளிர்கிறது.
நீர்மேலாண்மை: 6,50,000 புதிய நீராதாரங்களுடன் நீர்சேமிப்பு மற்றும் மேலாண்மை குறித்த மாபெரும் புரட்சி குஜராத் மாநிலமெங்கும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. குடிநீர் பகிர்மானம் மற்றும் மேலாண்மைக்கு சமுதாயப் பங்களிப்போடு மாநிலமெங்கும் 14000 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஐநா சபை விருதுபெற்ற மகத்துவமான திட்டமாகுமிது. நீர் பகிர்மானத்திற்காக மாநிலமெங்கும் 1900கிமீ பெருங்குழாய்களும், 1,00,000 கிமீ பகிர்மானக் குழாய்கள், 10,000 கிராமங்களை உள்ளடக்கிய சுத்திகரிப்பு நிலையங்கள் என 75% மக்களுக்குத் தரமான குடிநீர் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதோடு நாட்டிலேயே குஜராத் மாநிலத்தில் மட்டும் நதிநீர் இணைப்பு செயல்படுத்தப்பட்டு, நிலத்தடி நீர் உயர்ந்துள்ளதோடு வருங்கால தலைமுறையினருக்கும் தரமான குடிநீர் கிடைக்க உறுதி செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்து:மொத்த தேசத்துடன் ஒப்பிடுகையில்(58%),,92% சாலைகள் திட்டமிடப்பட்ட, தரமான சாலைகளாக மேம்படுத்தப்பட்டுள்ளன. அகமதாபாத்-டெல்லி பயண தூரமான 48மணி நேரத்தை, ஜப்பான், சீனா போன்ற உலக நாடுகளுக்கிணையான DELHI MUMBAI INDUSTRIAL CORRIDOR திட்டத்தின் மூலமாக 5 மணி நேரமாகக் குறைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
குஜராத்தின் துறைமுகங்கள் நாட்டின் 37% சரக்குகளைக் கையாளும் திறன் பெற்றிருக்கின்றன. நாட்டிலேயே அதிகபட்சமாக, குஜராத்தில் 14 விமானநிலையங்கள் இயங்குகின்றன.
உயர்தொழில்நுட்பத்தின் மூலமாக ஆசியாவிலேயே, FIBREOPTIC TECHNOLOGY மூலமாக அரசு அலுவலகங்கள் 18000 கிராமங்களுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளன.
இத்தகைய உட்கட்டமைப்பு மற்றும் பெருநகர வளர்ச்சிகளின் பிரதிபலிப்பை மேம்பட்ட மக்கள் வாழ்க்கைத்தரத்திலும் தொழில் முன்னேற்றத்திலும் காண முடிகிறது. தனிநபர் வருமானம் மற்றும் தொழிற்சாலை உற்பத்தியிலும் குஜராத் நாட்டுக்கே வழிகாட்டியாக விளங்குகிறது. குஜராத், ஆந்திரா போன்ற முன்னேறிய மாநிலங்கள் தங்கள் வெற்றிக்கதைகளைப் பகிர்வது மற்ற மாநிலங்களின் மேம்பாட்டிற்கு இன்றியமையாததாகிறது. குஜராத் மாநில வளர்ச்சியை எடுத்துக்காட்டாகக் கொண்டு விரிவுபடுத்தினால், மொத்த தேசமும் பயனடையும் என்பதில் ஐயமில்லை. தொலைநோக்குப் பார்வையும், அதைச் செயல்படுத்தும் சிந்தனைகளும் இருப்பின் இந்தியா மாற்றம் பெறும்;ஏற்றம் பெறும்.
நன்றி தமிழில்; அசோக் ரஞ்சித்
"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ... |
உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ... |
பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.