பத்து ஆண்டுகள் பதவியில் நீடித்தது தான் பிரதமர் மன்மோகன் சிங்கின் சாதனை

 பத்து ஆண்டுகள் பதவியில் நீடித்தது தான் பிரதமர் மன்மோகன் சிங்கின் சாதனை என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.

சென்னையில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் எம்ஆர். வெங்கடேஷ் எழுதிய “டாக்டர் மன்மோகன்சிங் – பத்தாண்டு சீரழிவு’ என்ற ஆங்கிலபுத்தகம் வெளியிடப்பட்டது.

இந்தப்புத்தகத்தை வெளியிட்டு சுப்பிரமணியன் சுவாமி பேசியது:

மன்மோகன் சிங் இந்த நாட்டுக்கு செய்த மிகப் பெரிய சேவையாக நான்கருதுவது அவர் தொடர்ந்து பத்து ஆண்டுகள் பதவியில் நீடித்தது தான். வேறொருவர் அந்தப்பதவியில் வராமல்செய்ததன் மூலம் அவர் நாட்டை மிகப் பெரிய சீரழிவிலிருந்து காப்பாற்றியுள்ளார்.

வரும்தேர்தலில் பாஜக. பெரும்பான்மை பலத்துடன் மத்தியில் ஆட்சியமைக்கும் என உறுதியாக நம்புகிறேன். அந்த நம்பிக்கையால் நான் பாஜக.வில் இணையவில்லை. ஜன சங்கம் அமைப்பில் ஏற்கெனவே இருந்துள்ளதால், இப்போது பாஜக.வில் இணைந்துள்ளேன்.

பாஜக.வின் தொலை நோக்கு திட்டத்தை தயாரிக்கும்குழு அந்த திட்டம்குறித்து எனது கருத்துகளை கேட்டது. அந்த தொலை நோக்கு திட்டத்தில் உள்ள அல்லது சேர்க்கப்பட உள்ள அம்சங்கள்குறித்து எனது கருத்துகளை நான் பகிர்ந்து கொள்கிறேன்.

புதிய அரசின்கொள்கைகளில் முதன்மையானதாக பொருளாதார சீர்திருத்தங்கள் ஏழைகளையும் சென்றடையும்வகையில் இருக்கும். முன்னாள் பிரதமர் நரசிம்மராவ், ஆந்திர முன்னாள்முதல்வர் சந்திரபாபுநாயுடு போன்றோர் மேற்கொண்ட பொருளாதார சீர்திருத்தங்களில் தொழில்நிறுவனங்களும், பணக்காரர்களும் உடனடியாக பயனடைந்தனர். ஏழைமக்களை அந்த சீர்திருத்தங்கள் உடனடியாகச் சென்றுசேராததால், அடுத்துவந்த தேர்தல்களில் அவர்களால் வெற்றியைப்பெற முடியவில்லை.

இந்திய மக்கள் தொகை இந்தியாவுக்கு மிகப் பெரிய பலமாக உள்ளது. 70 சதவீதத்துக்கும் அதிகமான இந்தியர்கள் 35 வயதுக்கு உள்பட்டவர்கள். இவர்கள் அனைவருக்கும் உரியகல்வியை வழங்கினால் அவர்கள் இந்திய பொருளாதாரத்தை மிகப் பெரிய அளவில் முன்னெடுத்து செல்வார்கள்.

பெட்ரோல் விலை உயர்வைச்சமாளிக்க “ஹைட்ரஜன் ஃப்யூல்செல்’ ஆராய்ச்சிகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும். “ஹைட்ரஜன் ஃப்யூல் செல்’ மூலம் அனைத்து வாகனங்களையும் இயங்கவைக்கும் வகையில் தொழில்நுட்பம் வளரும். அப்போது விலை உயர்வைப் பற்றியகவலை இருக்காது.

அதே போல், உலகத்தில் உள்ள தோரியத்தின் அளவில் இந்தியாவில்மட்டும் 60 சதவீதம் தோரியம் உள்ளது. அணு சக்தி எரிபொருளான யூரேனியம் 2050-க்குள் தீர்ந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய, அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்துக்கு பிறகு இந்தியாவில் தோரியம் தொடர்பான ஆராய்ச்சிகளுக்கு எந்த வித நிதியுதவியும் வழங்கப்படுவதில்லை.

தோரியம்தொடர்பான ஆராய்ச்சிகளில் புதிய அரசு பிரதானகவனம் செலுத்தும். அணு உலைகளில் தோரியத்தை பயன்படுத்த தொடங்கினால், இந்தியாவில் மின் தட்டுப்பாட்டு பிரச்னையே இருக்காது.

அதேபோல், உலகத்தில் உள்ள பெரியநாடுகளில் இல்லாதவகையில் இந்தியாவில் மட்டும் தான் ஆண்டின் 12 மாதங்களும் விவசாயம் செய்யமுடியும். ஆனால், மொத்த விவசாயிகளில் 25 சதவீதம்பேர்தான் ஒரு போகத்துக்கும் கூடுதலாக விவசாயம் செய்கின்றனர்.

விவசாயத்தில் மேலும் அறிவியல் முறைகளைப் புகுத்தி மூன்றுபோகங்கள் விளைவித்தால் அனைத்து நாடுகளையும் நாம் மிஞ்சலாம், என்றார் அவர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

கோரைக் கிழங்கு மருத்துவக் குணம்

உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ...

முருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்

முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ...

குடல்வால் (அப்பெண்டிக்ஸ்) நோய்

நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ...