நிலக்கரி ஊழல்வழக்கின் கோப்புகள் மாயமானது தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங் வைத்த இரவு விருந்து பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது . இந்த விவகாரத்திலிருந்து பின்வாங்குவது என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்று பாஜக திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.
நிலக்கரி ஊழல் வழக்கில் தொடர்புடைய முக்கியக்கோப்புகள் மாயமான விவகாரம் மற்றும் பெட்ரோல் டீசல்விலை உயர்வு தொடர்பாக தொடர்ந்து நாடாளுமன்றத்தில் பிரச்சினை கிளப்பிவருகிறது இந்த விவகாரத்தினால் நாடாளுமன்றத்தில் கூச்சல், குழப்பம் நிலவி வருகிறது . ‘பைல்’ எங்கே, அதை முதலில்சொல்லுங்கள் என்று பாஜக வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் இந்த விவாகரத்திற்கு முடிவு கட்டுவதற்காகவும், நாடாளுமன்றம் செயல்பட ஒத்துழைக்கவேண்டும் என்றுகோரியும் நேற்று இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார் பிரதமர் மன்மோகன்சிங். இதில் மூத்த பா.ஜ.க தலைவர்கள் அத்வானி, சுஷ்மாசுவராஜ் போன்றோர் கலந்துகொண்டனர். அவர்களுடன் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த பேச்சுவார்த்தையின் போது நாடாளுமன்றம் சுமூகமாக இயங்க ஒத்துழைப்பு தரவேண்டும் என்று அவர் கோரிக்கைவிடுத்தார். மேலும் ஓய்வூதியமசோதா உள்ளிட்ட பலமுக்கிய மசோதாக்களை பிரச்சினையின்றி நிறைவேற்ற உதவிடவேண்டும் என்றும் வேண்டிக்கொண்டார். கோப்புகள் காணாமல்போனது தொடர்பாக தீவிரவிசாரணை நடத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். இருப்பினும் இந்தவிவகாரத்தில் பின் வாங்குவதில்லை என்று பா.ஜ.க அறிவித்துள்ளது.
மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ... |
முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ... |
காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.