பிரச்சார குழுவின் தலைவராக அறிவிக்கப் பட்டப் பிறகு முதல் பொது கூட்டம். ஆந்திரத்தில் குறிப்பிட படும் அளவிற்கு பா.ஜ.க பெரிய சக்திவாய்ந்த கட்சி இல்லை. நாம் அறிந்தது வரை பணத்தையும், பிரியாணியையும் கொடுத்து தான் அரசியல் கூட்டதிற்கு ஆட்களை வர வைப்பார்கள். ஆனால் முதன்முதலாக மக்களாகவே முன்வந்து ரூபாய்.5/- செலுத்தி
ஒரு அரசியல் கூட்டதிற்கு வருகிறார்கள் என்றால் அது இந்திய அரசியல் வரலாற்றில் புதிது. அதை செயல்படுத்தி காட்டியிருப்பவர் மோடி. ஆம், கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி மோடியின் வருகையை முன்னிட்டு ஐதராபாத் நகரமே ஆடிப் போனது.
இந்த 5/- ரூபாய் கட்சிக்காக வசூலிக்கப்படவில்லை. உத்தரகண்ட் பேரழிவிற்கு உதவி செய்வதர்க்க்காகவே வசூலிக்கப் பட்டது. இந்த கூட்டத்திலேயே வசூலிக்கப் பட்ட பணமான ரூபாய்.10 லட்சத்தை ஆந்திர பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் திரு.கிஷன் ரெட்டி காசோலையாக உத்தரகண்ட் நிவாரண நிதிக்கு வழங்கினார்.
2 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் கூடிய மோடியின் கூட்டம் கடல் அலையை போல காட்சி அளித்தது. மோடியை ஐதராபாத் நகரத்திற்கு வரும்படி சவால் விட்ட ஒவாசி சகோதரர்கள் எங்கு போய் ஒளிந்துக் கொண்டார்கள் என்று யாருக்கும் கடைசி வரை தெரியவே இல்லை.
இந்த கூட்டத்தில் மனம் நெகிழ வைக்கும் சம்பவங்கள் சில நடை பெற்றன. திரு.பெய்ன்ஸ் என்பவர் கோவையில் வசிப்பவர். தற்போது வேலை விஷயமாக ஜெர்மனி சென்றுள்ளார். இவர் 86 வயதான தனது தாயாரை ஐதராபாத்தில் உள்ள தனது சகோதரி வீட்டில் விட்டு சென்றார். ஐதராபாத்தில் நடை பெறவிருக்கும் மோடியின் கூட்டத்தை பற்றி அறிந்த பெய்ன்ஸின் தாயார், மோடியின் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்ற விருப்பதை தனது மகனிடம் தெரிவித்தார். ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் ஆந்திர பா.ஜ.க தலைவர் திரு.கிஷன் ரெட்டியை தொடர்பு கொண்ட பெய்ன்ஸ்க்கு உடனே பதில் அளிக்கப் பட்டது. கட்சியினர் அவரை தொடர்பு கொண்டு கூட்டத்தில் கலந்து கொள்ள அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர். இத்துடன் முடியவில்லை.
கூட்டம் நடைபெற்ற 11ம் தேதி, மேடையில் பேசிக் கொண்டிருந்த திரு.கிஷன் ரெட்டி இந்த சம்பவத்தை பற்றி கூறி பெய்ன்ஸின் தாயாரை மக்களுக்கு அறிமுக படுத்தினார். இதை கவனித்துக் கொண்டிருந்த மோடி, அவரை மேடைக்கு அழைத்து அவரின் காலில் விழுந்து ஆசி பெற்றார். இதை ஜெர்மனியில் இருந்து இணையம் மூலம் பார்த்துக் கொண்டிருந்த பெயன்ஸ் ஆனந்த கண்ணீர் வடித்தார். பெயன்ஸின் தாயார் மேரி பெல் ஒரு கத்தோலிக் கிறிஸ்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மக்களோடு மக்களாக திகழும் தலைவர் என்பது மீண்டும் ஒருமுறை மோடி நிரூபித்து விட்டார்.
பெயன்ஸின் தாயாரை மேடைக்கு அழைத்து வாழ்த்துபெறும் மோடி
பிறகு உரையை தொடங்கிய மோடி 2 நிமிடங்கள் தெலுங்கு மொழியில் பேசி லட்சகணக்கான தொண்டர்களை அதிர வைத்தார். பிறகு தனது காரசார பேச்சை தொடங்கிய மோடி மத்திய அரசை வதக்கி எடுத்து விட்டார்.
5 வீரர்களை பாகிஸ்தான் ராணுவம் கொன்ற பிறகும் அமைதி காக்கும் மத்திய அரசை வசை பாடியவர் ஜம்மு மாநிலம் கிஷ்த்வர் நகரத்தில் நடைபெற்ற மத கலவரத்தையும் தட்டிக் கேட்டார். மத்திய அரசு செயல் இழந்து விட்டதை பல உதாரணங்கள் மூலம் அம்பல படுத்திய மோடி இறுதியில் மக்களை உற்சாக படுத்த "Yes We Can, Yes we will do" என்ற தன்னம்பிக்கை சொற்களோடு மக்களை கர்ஜிக்கவைத்தார்.
தெலங்கானா, சீமாந்திரா இரண்டு மாநில மக்களும் பிரிவிற்கு பின் நிச்சயம் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்ட மோடி மக்களை "ஜெய் தெலங்கானா" மற்றும் "ஜெய் சீமாந்திரா" என்று கூறவைத்து ஒற்றுமைக்கு வித்திட்டார்.
மோடியின் இந்த கூட்டம் 10க்கும் மேற்பட்ட இணையதளங்களிலும், 40க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி சேனல்களிலும், ஆந்திரத்தில் பல திரை அரங்குகளிலும், பற்பல இடங்களிலும் திரையிடப் பட்டு லட்ச கணக்கான மக்கள் உலகம் முழுவதும் கண்டனர் என்பது குறிப்பிடதக்கது.
ஆக மொத்தம் மோடியின் ஐதராபாத் விஜயம் மிகப்பெரிய மக்கள் ஆதரவுடன் இனிதே நிறைபெற்றது.
குறிப்பு: மோடியை கண்டால் எங்களுக்கு பயம் இல்லை என்று கூறும் காங்கிரஸ் கட்சி மோடியின் உரையின் போது 50% ஐதராபாத்தில் பவர் கட் செய்தது தான் ஏன் என்று தெரியவில்லை.
– எஸ்.ஜி.சூர்யா
இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ... |
இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ... |
இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.