நரேந்திரமோடி பங்கேற்கும் பா.ஜ.க இளைஞரணி மாநில மாநாட்டில் கலந்துகொள்ள 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் முன்பதிவுசெய்துள்ளதாக தமிழக பா.ஜ.க தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிரசாரக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்ட பிறகு நரேந்திரமோடி, ஆந்திரம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் என நாடுமுழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஆதரவுதிரட்டி வருகிறார்.
வரும் செப்டம்பர் 26-ஆம் தேதி திருச்சி ஜிகார்னர் மைதானத்தில் பா.ஜ.க இளைஞரணி மாநில மாநாடு நடைபெறவுள்ளது. “இளந் தாமரை மாநாடு’ என பெயரிடப்பட்டுள்ள இந்த மாநாட்டில் குஜராத் முதல்வரும் பா.ஜ.க தேசிய தேர்தல்பிரசாரக் குழுத் தலைவருமான நரேந்திரமோடி, பா.ஜ.க தலைவர் ராஜ்நாத்சிங் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இந்த மாநாட்டில் பங்கேற்பவர்கள் தங்கள்பெயரை பதிவு செய்துகொள்வதற்காக 5 லட்சம் விண்ணப்ப படிவங்களை அச்சடித்து அனைத்துமாவட்டங்களுக்கும் பா.ஜ.க அனுப்பியுள்ளது. இதற்காக செப்டம்பர் 2-ஆம் தேதி www.modiintamilnadu.com என்ற இணையதளம் தொடங்கப்பட்டது.
இதுவரை இணையதளம் மூலம் 15 ஆயிரம்பேரும், விண்ணப்பப்படிவங்கள் மூலம் நேரடியாக 35 ஆயிரத்துக்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளதாக தமிழக பா.ஜ.க தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
மாநாட்டுக்காக தில்லி செங்கோட்டையில் மோடி உரையாற்றுவதுபோன்று மேடை வடிவமைக்கப்பட உள்ளது. மாநாட்டுக்காக திருச்சிவரும் மோடி தலித், பழங்குடியினர் மற்றும் மீனவ சமுதாய தலைவர்கள், நடிகர், நடிகைகள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட பிரபலங்களையும் சந்திக்க தமிழக பா.ஜ.க நிர்வாகிகள் ஏற்பாடுகள் செய்துவருகின்றனர்.
கோவையை சேர்ந்த பா.ஜ.க ஒன்றிய துணைத்தலைவர் ராஜகோபாலன் சமீபத்தில் சாலைவிபத்தில் மூளைச்சாவு அடைந்தார். அவரது உடல் உறுப்புகள் அனைத்தும் தானம் செய்யப்பட்டு மற்றவர்களுக்கு பொருத்தப்பட்டன. மாநாட்டுமேடையில் ராஜகோபாலனின் உருவப்படத்தை மோடி திறந்துவைக்கிறார்.
மாநாட்டுக்காக மோடியின் புகழ் பாடும் செல்போன் ரிங்டோன்கள், பாடல்கள் ஆகியவற்றையும் பா.ஜ.க.,வினர் வெளியிட்டுள்ளனர். மோடியின் வருகைகுறித்து பிரசாரம் செய்வதற்காக மாவட்டம்தோறும் மோட்டார் சைக்கிள் பேரணியும், சென்னை ஐஐடி. முதல் திருச்சி என்ஐடி. வரை கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் பிரசாரயாத்திரையும் நடைபெறும் என்றும் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ... |
1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ... |
பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.