தே.ஜ., கூட்டணியை நெருங்கும் சந்திரபாபு நாயுடு

 சில ஆண்டுகளுக்கு முன்பு மாநில மற்றும் தேசிய அரசியலில் அசைக்க முடியாத நபராக விளங்கிய, தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபுநாயுடு, மீண்டும் தேசிய அரசியல் மீது, தனது செல்வாக்கை உயர்த்த பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணியில், அவர் இணையவுள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.

மதச் சார்பு கட்சியுடன் கூட்டணி அமைத்து, தவறுசெய்து விட்டேன் என கூறி பா.ஜ.க., கூட்டணியிலிருந்து, தெலுங்குதேசம் வெளியேறியது. ஆனால் இதற்க்கு பின் ஆந்திராவில் நடந்த, அனைத்து சட்ட சபை தேர்தல்களிலும், தெலுங்குதேசம் கட்சி, படுதோல்வி அடைந்ததே மிச்சம். கடந்த, 14 ஆண்டுகளாக, அதிகாரத்தை இழந்து, சந்திரபாபுநாயுடு, தவித்துவருகிறார். தொடர்ந்து எதிர்க் கட்சி வரிசையிலேயே இருப்பதால், அவரின் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களும், சோர் வடைந்துள்ளனர். தற்போது, தெலுங்கானா ராஷ்டிரியசமிதி, ஒய்எஸ்ஆர்., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு, செல்வாக்கு அதிகரித்துள்ளதால், தெலுங்குதேசம் கட்சியின் செல்வாக்கு வீழ்ச்சியடைந்து வருகிறது.

தெலுங்கு தேசத்தைசேர்ந்த, பல முக்கிய தலைவர்கள், மாற்று கட்சிகளுக்கு தாவி வருகின்றனர். இந்நிலையில், தொண்டர்களையும், நிர்வாகிகளையும் தக்க வைத்துகொள்ள வேண்டுமானால், அடுத்தாண்டு நடக்கவுள்ள, சட்டசபை மற்றும் லோக்சபாதேர்தலில், வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயம், தெலுங்குதேசம் கட்சிக்கு ஏற்பட்டுள்ளது. பலமான கூட்டணி அமைத்தால் மட்டுமே, வெற்றிகிடைக்கும் என, கட்சியின் நிர்வாகிகள் கருதுகின்றனர்.

பாஜ.க.,வுடன் கூட்டணிசேர்ந்தால், சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்று, ஆட்சியை பிடிப்பதோடு, லோக்சபா தேர்தலிலும் வெற்றிபெற்று, தேசிய அரசியலில், முக்கியபங்கு வகிக்கலாம் என, தெலுங்குதேசம் கட்சி நிர்வாகிகள், சந்திர பாபுவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.

இந்நிலையில் அடுத்தமாதம், டில்லியில் நடக்கவுள்ள ஒருவிழாவில், சந்திர பாபுவும், நரேந்திரமோடியும் பங்கேற்கவுள்ளனர். அப்போது, தெலுங்குதேசத்தை, தே.ஜ., கூட்டணியில் இணைப்பதற்கான பேச்சுவார்த்தை நடக்கும் என்று தெரிகிறது. பாஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணியில் இணையும்வாய்ப்புள்ளதா என, சமீபத்தில், சந்திரபாபுவிடம் கேட்ட போது, நழுவலாக பதில் தந்தார் இதனால், பா.ஜ., கூட்டணியில், அவர், இணைவதற்கான வாய்ப்பு பிருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் நவ.30 ஆம் தேதிவரை ...

மிரட்டும் எலி காய்ச்சல்

மிரட்டும் எலி காய்ச்சல் கேரளாவில் லெப்டோஸ்பிரோசிஸ் (எலி காய்ச்சல்) தீவிரமாக பரவிவருகிறது. இந்த ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா ந ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து விடுபடும் 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங் ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை அன்று கடந்த பலஆண்டுகளாக ஏற்றப்பட்டு ...

மருத்துவ செய்திகள்

சின்னம்மை ( நீர்க்கோளவான் )

சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ...

அமுக்கிரா கிழங்கு

இதன் இலையை உண்டால், உடல் வெப்பம் நீங்கும், காய் உண்டால் சிறு நீர் ...

முருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்

முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ...