சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலைவழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய எதிரியான “போலீஸ்’ பக்ருதீன் வெள்ளிக்கிழமை பிடிபட்டான்
இது குறித்து காவல்துறை தரப்பில் கூறப்பட்டதாவது:
பா.ஜ.க.,வின் மாநில பொதுச்செயலாளர் ரமேஷ், சேலத்தில் கடந்த ஜூலை 19-ஆம் தேதி இரவு அவரது அலுவலகத்தின் முன் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை குறித்து சேலம் மாநகரபோலீஸார் விசாரணை செய்தனர். வழக்கின் முக்கியத்துவம் கருதி, விசாரணை சிபிசிஐடி. சிறப்பு புலனாய்வுபிரிவுக்கு மாற்றப்பட்டது.
சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. மகேஷ்குமார் அகர்வால் தலைமையில் தனிப்படை போலீஸார் வழக்கை விசாரித்துவருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாகவும், பெங்களுரில் பா.ஜ.க அலுவலகம் அருகே வெடிகுண்டு வைத்த வழக்கு, மதுரையில் அத்வானி செல்லவிருந்தபாதையில் வெடிகுண்டு வைக்கப்பட்ட சம்பவம் ஆகியவை தொடர்பாகவும் மதுரை நெல்பேட்டையை சேர்ந்த போலீஸ்பக்ருதீன் (35), பிலால்மாலிக் (25), திருநெல்வேலி மேலப்பாளையத்தைச் சேர்ந்த பன்னா இஸ்மாயில் (38), நாகூரை சேர்ந்த அபுபக்கர்சித்திக் (45) ஆகியோரை போலீஸார் தேடிவந்தனர்.
மேலும் தேடப்படும் 4 பேரையும் பற்றி தகவல்தெரிவித்தால் ரூ. 20 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்றும் டிஜிபி. அலுவலகம் அறிவித்தது.
இந்நிலையில் சென்னைபெரியமேடு பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருப்பதிதிருக்குடை ஊர்வலத்துக்காக பலத்த போலீஸ்பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இதற்காக முக்கியமான பகுதிகளில் மாநில உளவுப் பிரிவு போலீஸார், மதவாத தீவிரவாத தடுப்புப்பிரிவு போலீஸார், க்யூபிரிவு போலீஸார், ஒருங்கிணைந்த குற்ற புலனாய்வுப் பிரிவு போலீஸார் ஆகியோர் ரகசியகண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
சூளையில் ஒருங்கிணைந்த குற்ற புலனாய்வுப் பிரிவு போலீஸார் ரகசியகண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு சந்தேகப்படும்படியாக ஒருநபர் நிற்பதை பார்த்தனராம்.
உடனே அந்த நபரை துப்பாக்கி முனையில் மடக்கிப் பிடித்துள்ளனர். அவனிடம் விசாரணை நடத்தியதில் , அவன் போலீஸாரால் தேடப்படும் போலீஸ் பக்ருதீன் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து போலீஸார் அவனை ரகசிய இடத்துக்கு கொண்டுசென்று விசாரணை நடத்தி வருகின்றனர். அவனது கூட்டாளிகள் வேறு யாரேனும் சென்னையில் இருக்கின்றனரா என போலீஸார் பல்வேறு இடங்களில் தீவிரசோதனை நடத்தி வருகிறார்கள்.
ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ... |
காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது. |
பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.