தேர்தலை முன்னிட்டு துணைராணுவ படைகளுக்கு முஸ்லிம்களை வேலைக்கு எடுக்கும் அரசின் சிறப்புத்திட்டம் குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்போவதாக பா.ஜ.க தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பாஜக துணைத் தலைவர் முக்தார் அப்பாஸ்நக்வி, தில்லியில் செய்தியாளர்களிடம் கூறியது:
துணைராணுவ படைகளுக்கு முஸ்லிம்களை சேர்ப்பதற்கான சிறப்புத்திட்ட அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ஐந்துமாநில பேரவை தேர்தலை மனதில்கொண்டு முஸ்லிம்களைத் திருப்திப்படுத்துவதற்காக இந்தநடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது.
அரசின் முயற்சியானது அரசியல்ரீதியாக வாக்குகளை சுரண்டும் நடவடிக்கையாகும். ஒவ்வொரு தேர்தலுக்குமுன்பும், வாக்குகளை கவர்வதற்காக காங்கிரஸ் இது போன்ற அறிவிப்புகளை வெளியிடுகிறது.
கடந்த காலங்களில், முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு செய்வதற்கான அறிவிப்பை அவர்கள் தேர்தலுக்குமுன் அறிவித்தார்கள். இப்போது முஸ்லிம்களுக்கு சிறப்புவேலை வாய்ப்பு குறித்துப் பேசுகிறார்கள். அப்பாவி முஸ்லிம்களை போலீஸார் கைதுசெய்ய கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சர், மாநில உள்துறை அமைச்சர்களுக்கு கடிதம் எழுதுகிறார். எங்கள் கட்சிப்பிரதிநிதிகள் அடுத்தவாரம் தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்து இது குறித்துப் புகார்செய்வார்கள் என்றார் முக்தார் அப்பாஸ் நக்வி.
அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ... |
நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ... |
இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். |
Leave a Reply
You must be logged in to post a comment.