ஜனாதிபதி பிரணாப் தனது பீகார்விஜயத்தை வேறு தினத்துக்கு மாற்றிக்கொள்ள வேண்டும்

ஜனாதிபதி பிரணாப் தனது பீகார்விஜயத்தை வேறு தினத்துக்கு மாற்றிக்கொள்ள வேண்டும் நரேந்திரமோடி தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெறும் நாளில் பீகார்வருவதை தவிர்க்கவேண்டும் என ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு பாஜக வேண்டுகோள் விடுத்துள்ளது.

பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நரேந்திரமோடி மாநிலம் மாநிலமாக சென்று தேர்தல்பிரசாரம் செய்து வருகிறார். ஆந்திரா, ம.பி.,, தமிழ்நாடு, டெல்லியை தொடர்ந்து வரும் 27ம் தேதி பீகார்மாநிலம் பாட்னாவில் பிரமாண்ட பொதுகூட்டத்தில் பேச திட்டமிட்டுள்ளார். இதற்காக கடந்த 6 மாதங்களாக மாநில பாஜக தீவிரமாக பணியாற்றிவருகிறது. இந்நிலையில் பாஜக கூட்டணியிலிருந்து விலகிய ஐக்கிய ஜனதாதளம், மோடி பொதுகூட்டத்தை காந்தி மைதானத்தில் நடத்த அனுமதி மறுத்துள்ளது. இதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் மோடிகூட்டம் நடைபெறும் அதேநாளில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை மாநிலத்துக்கு வருமாறு அழைப்பும்விடுத்துள்ளது. இதனை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார். வரும் 27ம் தேதி பாட்னாவில் மோடி பொதுக்கூட்டம் நடைபெறும் விஷயத்தை பீகார்முதல்வர் நிதிஷ் குமார், ஜனாதிபதி அலுவலகத்துக்கு திட்டமிட்டு மறைத்துவிட்டதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

ஜனாதிபதி வருகையையொட்டி பாட்னாமுழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படும். கெடுபிடிகள் அதிகமாக இருக்கும். மேலும் விமானநிலையத்திலும் வேறு விமானங்கள் தரையிறங்க அனுமதிமறுக்கப்படும். இதனால் மோடியின் விமானம் பாட்னாவில் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்படும். பொதுகூட்டத்துக்கு வெளி மாவட்டங்களிலிருந்து மக்கள்வருவது தடுக்கப்படும். இப்படி பலபிரச்னைகள் ஏற்படும் என்பதால் ஜனாதிபதி பிரணாப் தனது பீகார்விஜயத்தை வேறு தினத்துக்கு மாற்றிக்கொள்ள வேண்டும் என பாஜ சார்பில் ஜனாதிபதி பிரணாப்புக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

முருங்கை பிஞ்சு

முருங்கை பிஞ்சை எடுத்து அதை சிறிது சிறிதாக நறுக்கி அதனை நெய்யில் வதக்கி ...

கல்யாண முருங்கை

முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ...

உணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்

நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ...