கான்பூரில் நடந்த கூட்டத்தில் பாஜக பிரதமர்வேட்பாளர் மோடி பேசியதாவது: காங்கிரஸ் வெற்று வாக்குறுதிகளை தந்து நாட்டை அழித்துவருகிறது. காங்கிரசுக்கு பாடம் கற்பிக்கவேண்டும். உங்களின் எதிர் காலத்தை மாற்ற நீங்கள் விரும்பினால் இந்த அரசை தண்டிக்கவேண்டும்.
காங்கிரஸ் அரசு ஏழைமக்களை பற்றி கவலைப்படவில்லை. காங்கிரசுக்கும், அதன்கூட்டணி கட்சியினருக்கும் மக்கள் பாடம்புகட்ட வேண்டும். இந்த அரசு பணவீக்கத்தை கட்டுப்படுத்துவோம் என்றனர். ஆனால் இதில் இவர்கள் தோல்வி அடைந்தனர். இவர்கள் உங்களைபற்றி கவலைப்படவில்லை. எனவே அவர்களைபற்றி நீங்கள் கவலைப்படவேண்டாம். வரும் லோக்சபா தேர்தலில் காங்கிரசை தண்டியுங்கள்.
விலைவாசி உயர்வுகுறித்து சோனியாவும், பிரதமரும் மவுனம் காக்கின்றனர். காங்கிரஸ் அரசை வேரறுக்கும்நேரம் இது. நாட்டின் தலைவிதியை நாங்கள் மாற்றுவோம். நாட்டில் நடந்துவரும் ஊழல்கள் குறித்து காங்., வாய்திறக்க மறுக்கிறது. இந்த அரசு சட்டங்கள் கொண்டுவந்ததையே பேசுகிறது. வளர்ச்சி குறித்து இவர்களின் பதில் என்ன ? நாட்டில் பிரதமர் அவர்மீதான அனைத்து நம்பிக்கைகளையும் இழந்துவிட்டார்.
இங்குள்ள மாநில அரசு ஓட்டுவங்கி அரசியல் நடத்துகிறது. பயங்கரவாதிகள் என்று சந்தேகிப்ப்பவர்களை அகிலேஷ் அரசு விடுதலைசெய்ய நினைக்கிறது. அகிலேஷ் அரசு தேசிய பாதுகாப்புடன் விளையாடுகிறது. அகிலேஷ் அரசு நிர்வாகத்தில் வளர்ச்சிபணியில் ஏகப்பட்ட குறைபாடுகள் உள்ளன. இவ்வாறு மோடி பேசினார்.
வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ... |
இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ... |
சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.