மகாராஷ்டிர மாநிலத்தில் காங்கிரஸ்கூட்டணி ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட நீர்ப்பாசன திட்டங்களில் பலகோடி ரூபாய் நிதிமுறைகேடு நடைபெற்றதாக எழுந்துள்ள புகார்குறித்து விசாரிக்கும் மாதவ்சித்தாலே குழுவிடம், அம்மாநில பாஜக தலைவர்கள் ஆதாரங்களை ஒப்படைத்தனர்.
14 ஆயிரம்பக்கங்கள் கொண்ட ஆதாரங்களை மாட்டுவண்டியில் ஏற்றி வந்த அந்தமாநில பாஜக தலைவர் தேவேந்திரா பட் நாவிஸ், மாநில சட்டமேலவை எதிர்க் கட்சித் தலைவர் வினோத்தாவ்தே ஆகியோர் ஒளரங்காபாத்தில் திங்கள் கிழமை மாதவ் சித்தாலேவை நேரில் சந்தித்து அவற்றை ஒப்படைத்தனர்.
இதையடுத்து, அவர்கள் செய்தியாளர்களிடம்கூறியது: மகாராஷ்டிர மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி அரசில் செயல்படுத்தப்பட்ட நீர்ப்பாசனத்திட்டங்களில் கோடிக்கணக்கான ரூபாய் நிதிமுறைகேடு நடைபெற்றுள்ளது. அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோர் இணைந்தே இந்தச்செயலில் ஈடுபட்டுள்ளனர். இந்த முறைகேட்டில் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த துணைமுதல்வர் அஜீத்பவாருக்கும் தொடர்புண்டு.
உண்மையை வெளிக் கொணர வேண்டும்: இந்தமுறைகேட்டை நிரூபிக்க நாங்கள் அளித்துள்ள ஆதாரங்களே போதுமானவை. இருப்பினும் கூடுதல் ஆதாரங்களை திரட்டிவருகிறோம். அந்த ஆதாரங்களை ஒப்படைக்க விசாரணை குழுவிடம் 15 நாள்கள் அவகாசம் கோரியுள்ளோம் என்றனர்.
இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ... |
உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ... |
முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.