கன்னியாகுமரி தெற்கு ரதவீதியில் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய பாஜக சார்பில் மத்திய அரசை கண்டித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு பேசியதாவது. அவர், ''மத்தியில் ஆளும் காங்கிரஸ் ஆட்சியில் அனைத்து
துறைகளும் தோற்றுப்போய் உள்ளது. விலை வாசி உயர்ந்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் குற்றச் சாட்டுக்கு ஆளாகாத மந்திரிகளை காட்டமுடியாது. பிரதமர் முதல் பெரும்பாலான மந்திரிகள் ஊழலில் சிக்கியுள்ளனர். ஸ்பெக்டரம் ஊழலில் முன்னாள் மத்திய மந்திரி ராசா சிறையில் அடைக்கப்பட்டார். ஸ்பெக்டரம் பிரச்சினையில் தொடர்புடைய பிரதமர் மற்றும் மத்தியமந்திரி ப. சிதம்பரத்தையும் சிறையில் அடைத்திருக்க வேண்டும்.
தற்போது நிலக்கரிஊழல் நடந்துள்ளது. இதில் பிரதமர் குற்றவாளி என அந்ததுறை செயலாளரே கூறியுள்ளார். ஆனால் மத்திய அரசு அதுதொடர்பான ஆவணங்களை களவு செய்துவிட்டது.
அதே சமயம் பாஜக ஆட்சி வாஜ்பாய் தலைமையில் நடந்த போது விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப்பட்டது. அணுகுண்டு சோதனை நடத்தி உலகளவில் இந்தியா சாதனைபடைத்தது. அமெரிக்கா, ஜப்பான் எச்சரிக்கையைமீறி இந்த சாதனையை வாஜ்பாய் அரசு படைத்தது.
மேலும் அமெரிக்கா, ஜப்பான், சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் நமதுநட்பு பலமாக விளங்கியது. கன்னியாகுமரி–காஷ்மீர் தங்கநாற்கர சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்போது போக்குவரத்து சீர்அடைந்து நாடு முன்னேற்றம் அடைகிறது.
ஊழல்களின் மொத்த உருவமாக ஆளும் காங்கிரஸ் அரசு உள்ளது. நரேந்திர மோடியை பிரதமராக்கினால் ஊழல் அற்ற நல்லாட்சியை கொடுப்பார். விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப்படும். குஜராத்தை இந்தியாவில் முதல் மாநில மாக்கியதுபோல் இந்தியாவை உலகவல்லரசு நாடாக முதன்மை நாடாக மாற்றுவார்.
இலங்கை காமன்வெல்த் மாநாட்டில் மத்திய அரசு பங்கேற்கும்முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும். பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்தால் கச்சத்தீவை மீட்க நரேந்திர மோடி நடவடிக்கை எடுப்பார் என்றார்.
ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ... |
நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.