ம.பி.,மாநிலம் ஷாடோலில் நடைபெற்ற காங்கிரஸ்கட்சி பொதுக்கூட்டத்தில் கடந்த 17ம் தேதி ராகுல்காந்தி பேசினார். பெருகிவரும் கற்பழிப்புசம்பவங்கள் தொடர்பாக விளக்கம் அளித்த அவர், மேடையின் எதிரே அமர்ந்திருந்த பழங்குடியினபெண்களை நோக்கி, ‘மத்திய பிரதேசத்தில் கடந்த 10 ஆண்டுகளாக நடந்த பாஜக. ஆட்சியின்போது உங்களில் யாரும் கற்பழிக்கப்பட்டதே கிடையாதா?’ என பகிரங்கமாககேட்டார்.
பொதுஇடத்தில் பெண்களைபார்த்து இதைப்போன்ற கேள்வியை கேட்பது விஷமத்தனமானது – ஆட்சேபனைக்குரியது என்பதால் ராகுல்காந்தி மீது இன்று போபால் நீதிமன்றத்தில் 2 வழக்குகள் தொடுக்கப்படும் என்று பாஜக. துணைத் தலைவர் பிரபாத்ஜா கூறியுள்ளார்.
பழங்குடியின பெண்களின் கற்பழிப்புதொடர்பாக ராகுர்காந்தி வேண்டுமென்றே மரியாதை குறைவாக பேசியுள்ளார். இதற்காக அவர்மீது மானநஷ்ட வழக்கும், வன்கொடுமை(தடுப்பு) சட்டத்தின் கீழ் இன்னொருவழக்கும் போபால் கோர்ட்டில் பா.ஜ.க. சார்பில் தொடரப்படும்.
இதேபோன்று , நர்மதாநதியை மத்தியபிரதேச மாநிலம் கற்பழித்துவிட்டதாக சமீபத்தில் மத்திய மந்திரி ஜோதிராதித்யா சிந்தியா கூறியுள்ளார்.
அவரதுபேச்சு நர்மதா நதியை தங்களின் தாயாகநினைத்து வழிபடும் ம.பி.,மாநில மக்களின் உணர்வுகளை புண்படுத்திவிட்டது. அவர் மீதும் பாஜக. சார்பில் தனிவழக்கு தொடுக்கப்படும் என பிரபாத்ஜா கூறினார்.
பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ... |
தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.