காமன்வெல் மாநாட்டில் இந்தியா பங்கேற்ககூடாது என தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதற்கு வரவேற்புதெரிவித்த தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், இந்தியா தனிமைப்படுத்தப்படும் என்ற ரீதியில் பேசிய இலங்கை தூதரின் பேச்சுக்கு கண்டம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடத்தப்படகூடாது. மீறி நடத்தப்பட்டால் இலங்கையின் தலைமை ஏற்று 2 ஆண்டுகள் செயல்பட வேண்டிவரும். எனவே இந்தியா இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ள கூடாது என பா.ஜ.க வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் தமிழக சட்ட சபையில் அனைத்து கட்சிகளின் ஆதரவோடு இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளகூடாது என்று தீர்மானம் நிறைவேற்றியதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறோம். தமிழகமுதல்வர் ஜெயலலிதா மற்றும் தீர்மானம் நிறைவேற உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றிதெரிவித்துக் கொள்கிறோம்.
இந்நிலையில் தலைநகர் டெல்லியில் இருந்து இலங்கைதூதர் கரியவாசம் வெளியிட்டுள்ள கருத்து கண்டனத்துக் குரியது. எல்லா முனையிலும் தோற்றுப்போன மத்திய அரசால் எதுவும்செய்ய முடியாது என்ற தைரியத்தில்தான் அவர் பேசி இருக்கிறார்.
எந்தவிசயத்திலும் யாராலும் இந்தியாவை தனிமைப்படுத்த முடியாது. பொருளாதாரம், மனிதவளம், அறிவியல் வளர்ச்சி என அனைத்து துறைகளிலும் நம்மை சுற்றியே மற்ற நாடுகள் உள்ளன.
சீனா, பாகிஸ்தானைநினைத்து மத்திய அரசு பயப்படுகிறது. இதனால் இலங்கை சீனாவின் தளமாக மாறிவருவதை மத்திய அரசு உணரவேண்டும். வெளிநாட்டு கொள்கையில் துணிச்சலும், சாதுர்யமும் வரவேண்டும் என்று அவர் கூறினார்.
ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ... |
வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ... |
வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.