இனி நம்நாட்டில் அனைவரும் அவரவர் ‘கைகளை வெளியில் தெரியாதபடி, கவர்போட்டு மூடி மறைத்தபடிதான் செல்லவேண்டுமா? என பாஜக கேள்வி எழுப்பியுள்ளது
அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேயாக தெரியும் என்பார்கள். அதேபோன்று பாஜகவை கண்டு தோல்வி பெயத்தில் காங்கிரஸ் அரண்டுதான் போயுள்ளது. இதை நிரூபிப்பதை போன்று ம.பி காங்கிரஸ்ஸின் செயல் உள்ளது . மத்தியப் பிரதேச காங்கிரஸார், அம்மாநில தேர்தல் ஆணையத்திடம் ஒருவிநோத கோரிக்கையை வைத்தனர். ம.பி.,மாநிலத்தில் உள்ள குளங்களில் இந்தசீஸனில் தாமரைப்பூக்கள் அதிகம் மலர்ந்து அழகாக காட்சி அளிக்கின்றன. தாமரைப்பூ, பா.ஜ.க சின்னம் என்பதால், காங்கிரஸார் இந்த தாமரைப் பூக்களை வைத்து பா.ஜ.க.,வினர் தேர்தலில் தங்கள் சின்னத்தை பிரபலப்படுத்துவர் என்றும், அதனால் இந்தக்குளங்களை ‘கவர்’ போட்டு மூட வேண்டும் என்றும் ஒரு விநோதக் கோரிக்கையினை முன்வைத்தனர். இதை கேட்ட தேர்தல் ஆணையத்துக்கு ‘பகீர்’ என்று ஆனது. அவ்வளவு செலவுசெய்து, குளங்களை எல்லாம் மூட முடியாது என்று கைவிரித்துவிட்டது.
இந்தச் செய்தியை கேள்விப்பட்ட பா.ஜ.க.,வினர் வயிறுகுலுங்க சிரித்ததுடன், பதிலுக்கு ஆவேச கேள்வியையும் எழுப்பினர். காங்கிரஸ் கட்சியின் தேர்தல்சின்னமாக ‘கை’ உள்ளது. எந்தநேரத்திலும், ஏன் வாக்குச்சாவடியில் ஓட்டுப்போடும்போதும் கூட, யார் வேண்டுமானாலும் தங்கள் கையைக்காட்டி ஓட்டுப்போடச் சொல்லலாம். எனவே, தேர்தல் நேரத்தில், மக்கள் அனைவரும் தங்கள் ‘கை’களை ‘கவர்’ போட்டு மறைத்துக்கொண்டு, வெளியில் தெரியாதபடி செல்லவேண்டும் என்று கோரினால் காங்கிரஸார் ஒப்புக் கொள்வார்களா? என ஆவேசப் பட்டனர்.
மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸாரின் இந்த விநோதக் கோரிக்கையால் மாநில அரசியலில் பரபரப்பை விட நகைச்சுவை உணர்வு அதிகம் தொற்றிக் கொண்டுள்ளது.
தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ... |
முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ... |
நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ... |
Leave a Reply
You must be logged in to post a comment.