70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்ட சபைக்கு டிசம்பர் 4ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்ததேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை இறுதிசெய்ய பாஜக.வின் மத்திய தேர்தல்குழு நேற்றிரவு டெல்லியில் கூடியது.
சுமார் 8மணி நேரம் நீடித்த இந்தகூட்டத்தின் முடிவில் 62 பாஜக. வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.
புதுடெல்லி தொகுதியில் போட்டியிடும் டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித்தை எதிர்த்து விஜேந்தர்குப்தா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று வெளியிடப்பட்ட 62 பெயர்கள் அடங்கியவேட்பாளர்கள் பட்டியலில் தற்போதைய பாஜக. எம்எல்ஏ.க்கள் 23பேர் இடம் பெற்றுள்ளனர்.
பாஜக.வின் சார்பில் டெல்லி முதல்மந்திரி பதவிக்கு போட்டியிடும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஹர்ஷ்வர்தன், தற்போதைய தொகுதியான கிருஷ்ணா நகரில் மீண்டும் போட்டியிடுகிறார்.
70 தொகுதிகளில் 62 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ள பாஜக., 4 தொகுதிகளை பாதல் தலைமையிலான ஷிரோமணி அகாலிதளம் கட்சிக்கு ஒதுக்கியுள்ளது.
இன்னும் 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள்பெயர் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.
ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ... |
பன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ... |
காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது. |
Leave a Reply
You must be logged in to post a comment.